உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் பராக்கிரமன் கூறுவது வேடிக்கையாக இல்லை? என்று கேட் டுக் கொண்டே அவர்களருகே வந்தான். கைது செய்வதாம்! அதற்கு நாமும் கைகளை நீட்டுவதாம்! நான் நல்லவனாக இருப்பதாலேயே வல்லவனாக இருக்க மாட்டேன் என்று தலையூர்க்காளியும் அவன் தளபதியும் எண்ணி விட்டார்களே! என்று கூறி குன்றுடையான் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். உங்களோடு விவாதித்துக் கொண்டிருக்க எனக்கு நேர மில்லை. என் மன்னரது ஆணையை நிறைவேற்ற வேண்டும். இப்போது கைதாக ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?' " சீறினான் தலையூர்த் தளபதி! குன்றுடையானின் மீசைகள் துடித்தன. அவன் கையிலிருந்த வாளின் பிடியை மேலும் இறு கப் பிடித்துக் கொண்டான். "என் பிணத்தையும் என் குடும்பத்தார் பிணங்களையும் வேண்டுமானால் கைது செய்து கொண்டு போ! என்று குன்றுடையான் செய்த முழக்கம் இருபுறமும் நின்ற படை வரி சையில் எதிரொலித்தது. இவ்வளவு நேரம் பராக்கிரமனும் குன்றுடையானும் பேசியதைக் குமுறும் நெஞ்சத்துடன் பொறு மையாகக் கேட்டுக் கொண்டிருந்த ராக்கியண்ணன் தலையூர்த் தளபதியை ஏற இறங்கப் பார்த்தார். வைரம் பாய்ந்த பனை மரம் போன்ற வலிவான உடல். நெருப்புப் பொறிகளைக் கக்கிக் கொண்டிருக்கும் கண்கள். பாறைகளிரண்டைப் பெயர்த் தெடுத்துப் பொருத்தியது போன்ற தோள்கள். உதடுகளின் மேலே இரண்டு கட்டாரிகளை வைத்தது போல் மீசை. உயர்ந்து வளர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் குதிரையே கூட அவ னைத் தாங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு பார்வையிலேயே தளபதி பராக்கிரமனின் வலிமையை முழு மையாக உணர்ந்து கொண்ட ராக்கியண்ணன் அவனிடம் பேச் சுக் கொடுத்தார்: 'தலையூர்த் தளபதியே! எங்களையெல்லாம் கைது செய்து கொண்டுவர வேண்டும் என்பதுதானே உனது மன்னன் விருப் பம்?" உங்களைக் கைது செய்வதற்கு மாரிக்கவுண்டன்பாளையம் செல்ல வேண்டுமேயென எண்ணியிருந்தேன். அந்த வேலை யும் இல்லாமற் போய் விட்டது. 48 64 'மிகவும் நன்றி! என்னையும் சேர்த்துத்தான் எங்களை யெல்லாம்" என்று என்று குறிப்பிட்டேன். நாங்கள் கைதாவதைப் 260