உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால் ஒன்று; தலையூர்க் குடும் பத்து இளைஞர்களுக்கு; ஏன் உனது மன்னன் உட்பட பல ருக்கு போர்ப் பயிற்சி அளித்த பாரம்பரியத்தில் வந்தவன் நான்! எனவே என்னைக் காட்டிலும் ஒரு பெரிய வீரன் என் னைக் கைது செய்வதாக இருந்தால் நான் மகிழ்ச்சி அடைந் திருப்பேன்! உமது கேலியும் கிண்டலும் எனக்குப் புரிகிறது. உம்மைக் காட்டிலும் ஒரு பெரிய வீரன் உமது எதிரில் நிற்கிறான் என் பதை இன்னமும் நீர் உணர்ந்து கொள்ளாதது பெரிய வேடிக்கை! "வேடிக்கையாகக் கூட உன்னை ஒரு வீரன் என்று வர்ணித் துக் கொள்ளாதே! என்னைக் காட்டிலும் நீ பெரிய வீரன் என்பது உண்மையானால் அதை இப்போதே இங்கேயே நிரூ பித்துக் காட்ட வேண்டும்.நிரூபித்தால் நாங்கள் அனைவருமே உன் பின்னால் கை கட்டிக் கொண்டு கைதிகளாகத் தலையூர் வருவதற்குத் தயார்!" "எப்படி நிரூபிக்க வேண்டும்? 'நீ கொண்டு வந்துள்ள பெரிய படையும். இங்குள்ள சிறிய படையும் மோதுவதால் உனது வீரத்துக்குப் பெருமையில்லை. என்னை விட நீ வீரத்தில் சிறந்தவனா என்ற கேள்விக்கு விடையளிக்க உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். நாம் இரு வரும் தனியாக மோதிப் பார்ப்போம். அதாவது மற்போர் புரிவோம். நான் உன்னிடம் தோற்று விட்டால் எங்கள் அனை வரையும் கைது செய்து கொண்டு போக உனக்கு தடையின்றி அனுமதி அளித்ததாக அர்த்தம்! என்ன சொல்லுகிறாய்? "ராக்கியண்ணரே! என் உடல் வலிவையும் உள்ளத்து உறுதி யையும் ஈசற்பூச்சியின் சிறகுகள் என்று கருதி விட்டீர்! என் னிரு கரங்களும் ராஜாளிப் பறவையின் இறக்கைகள் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறேன். உமது நிபந்தனையை ஏற்க நான் தயார்!' தலையூர்த் தளபதி தனது கையிலிருந்த ஆயுதங்களைக் கீழே வீசி விட்டுக் குதிரையிலிருந்து குதித்து மற்போருக்கு ஆயத்த மாகத் தோள் தட்டி நின்றான். ராக்கியண்ணனும் தன்னிட மிருந்த வாள், ஈட்டி, கேடயம் ஆகியவற்றைக் கீழே போட்டு விட்டு மற்போருக்கு முன் வந்தார். குன்றுடையானும் சின்ன 261