உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் திட்டத்துக்கு வழி வகுத்திருக்கிறேன்" என்று சொன்னதும், பராக்கிரமன் தனது பெரிய விழிகளால் வலை போட்டுத் தேடினான். . "இரண்டு பெண்களும் ஒரே மாதிரி தெரிகிறார்களே, இதில் நீங்கள் சொல்லும் அருக்காணி யார்?" என்று பராக்கிர மன் மாந்தியப்பனின் காதோரம் வந்து கேட்டான். "சிகப்புச் சேலை! சிகப்புச் சேலை!" என்று மாந்தியப்பன் கிசுகிசுத்தான். பராக்கிரமன் நிதானமாகப் பார்த்துக் கொண் டான் என்றாலும் அவன் கண்ணுக்கு அருக்காணியும் குப்பாயி யும் ஒரே மாதிரிதான் தெரிந்தார்கள். அந்தக் கூட்டத்திலும் அந்தச் சூழ்நிலையிலும் அதற்கு மேல் அவன் மாந்தியப்பனிடம் விளக்கம் கேட்க விரும்பவில்லை. அதற்குள் வீரமலை அந்தப் பாசறையின் மேடை மீது வந்து நின்றான். அந்த மேடை, ஆசான் உடல் இருந்த மேடைக்குச் சற்று தொலைவில் இருந்தது. வீரமலையின் கையில் ஒரு மூங் கில் குழாய் இருந்தது. அந்த மூங்கில் குழாயின் இரு முனை களும் மூடப்பட்டு முத்திரை குத்தப்பட்டிருந்தது. "எல்லோரும் சுவனத்தை என் பக்கம் திருப்புமாறு வேண்டு கிறேன் என்று வீரமலை உரத்த குரலில் பேசியதும், முன்னை விடப் பன்மடங்கு அமைதி அங்கே கூடியிருந்தோரிடம் காணப் பட்டது. வீரமலை, தொடர்ந்து பேசினான்: "இதோ என் கையிலிருக்கும் முத்திரை குத்தி மூடப்பட் டுள்ள மூங்கில் குழாய் ஆசான் அவர்கள் என்னிடம் ஒப் படைத்தது; அவர் இறந்த பிறகு பொதுமக்கள் முன்னிலையில் படிக்கப்பட வேண்டுமென்று ஆணையிட்டுள்ள மரண மாகும். இதை முதலில் இங்குள்ள முக்கியமான பெரியவர் களிடம் காட்டுகிறேன். சாசன வீரமலை மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து தன்னிட முள்ள மூங்கில் குழாயையும், அது சரியாக மூடப்பட்டு முத் திரையிடப்பட்டுள்ளதா என்பதையும் எல்லோரும் சரியாகப் பார்த்துக் கொள்ளட்டும் என்பதற்காக தலையூர்க் காளியிட மும், மற்றும் காணியாளர்கள், எல்லைக் காவல் ஆட்சியாளர் களிடமும் காட்டினான். அனைவரும் சரியாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினாலும் கூட, அதற்குள்ளிருப்பதாகச் சொல்லப்படும் மரண சாசனத்தில் . 280