உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி ஆசான் என்ன எழுதியிருப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த் துக் கொண்டிருந்தனர். அவர்களின் முன்னாலேயே மூங்கில் குழாயில் உள்ள முத்திரையை வீரமலை அகற்றினான். குழாய்க் குள்ளிருந்து ஓலையை எடுத்தான். அந்த ஒலையை தலையூர்க் காளியிடமும் பொன்னர் - சங்கரிடமும் குறிப்பாகக் காட்டி நீங்களும் ஆசானின் மாணவர்கள் என்பதால் அவரது கை யெழுத்துத்தானா என்பதை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங் கள் என்றான். காளி மன்னன். பொன்னர் - சங்கர் மட்டு மின்றி அங்குள்ள காவல் ஆட்சியாளர்கள், காணியாளர்கள் அந்தக் கையெழுத்தைப் பார்த்து ஒப்புதல் அளிப்பது போலத் தலையை ஆட்டினர். மீண்டும் வீரமலை மேடையில் ஏறிக் கொண்டு அந்த ஓலைகளைக் கையில் ஏந்தியவாறு "இதோ நமது ஆசான் ராக்கியண்ணன் எழுதியுள்ள சாவு' முறி" எனப்படும் மரண சாசனப் பத்திரத்தை உங்கள் முன்னால் படிக்கிறேன் என்று கூறிவிட்டுப் படிக்கத் தொடங்கினான். பாசறையில் குழுமியிருந்தோர், ஊசி விழுந்தால் கூட அதன் ஒலி கேட்கக்கூடிய அளவுக்கு அவ்வளவு நிசப்தமாக,வீர மலை என்ன படிக்கப் போகிறான் என்பதை மெத்த ஆவ லுடன் கவனித்தனர். பாசறைக்கு வெளியே அலைமோதிக் கொண்டிருந்த கூட்டமோ ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு வீரமலையின் குரல் கேட்கத் துடித்துக் கொண்டிருந்தனர். - • 6 # எத்தனையோ செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கூறிய வீர மலை, ஆசானின் மரண சாசனம் பற்றி எதுவுமே இதுவரை யில் கூறவில்லையே அதில் என்ன எழுதப்பட்டிருக்குமோ என்று மேடையை நோக்கி வீரமலையை அண்ணாந்து பார்த் துக் கொண்டிருந்தார் மாயவர்! 281