உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - உறுதியளித்தது தவறுதான்! அதைவிடப் பெரிய தவறு என் உறுதிமொழியை பொன்னர் சங்கர் இருவரும் நம்பும்படி நான் நடந்து கொண்டது!" மாயவரே! தலையூருக்கு ஒரு வகையில் வளநாடு அடிமை யாக இருந்தாலும் தலையூரும் சரி, வளநாடும் சரி; நமது சோழ ராஜ்யத்துக்குக் கட்டுப்பட்டவைகள்தானே! அப்படி யிருக்கும் போது இப்போது நான் என்னவோ புதிதாக வள நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த முற்படுகிறேன் என்று இந்த இளம் வீரர்கள் நினைப்பது சரியல்லவே! - பொன்னர் தனக்கேயுரிய நிதானத்துடன் ஆனால் திட்ட வட்டமாகத் தெரிவித்தான். "அடிமைத்தனம் தொடர வேண்டு மென்று ஆண்டவன் கட்டளையா? இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்ள என் உள்ளம் இடம் தரவில்லை. கேடுகள் ஒழிய வேண்டும் வள நாட்டு மக்கள் நல்வாழ்வு பெற வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் தாங்கள் எங்களுக்குத் துணை புரிந் தீர்கள் என்பது உண்மையானால் அதற்குப் பதிலாக உறையூ ருக்குக் கப்பம் கட்டுகிறவர்களாக நாங்கள் இருக்க வேண்டு மெனக் கூறுவது எங்கள் தன்மான உணர்வுக்கும் உரிமை வேட்கைக்கும் விடப்படும் அறைகூவல் அல்லவா? .. "அப்படியானால் சோழ நாட்டுடன் வள நாட்டுக்கு எந்த வகையான தொடர்பும் இருத்தலாகாது என்பது பொன்னர்- சங்கரின் கருத்தோ?" சோழ மன்னரின் இந்தக் கேள்வியில் அவரது மன உளைச் சல் தெரிந்தது. அதற்கு சங்கர் உடனடியாக விடையளித்து விட்டான். "தொடர்பே இருக்கக் கூடாதென்றால் எங்களை அங்கீ காரம் செய்யும் இந்த விழாவுக்கு வந்திருக்கவே மாட்டோம்! உறையூர், வள நாட்டை விடப் பெரிய நாடு! படை பலம் மிக்க நாடு! பரப்பளவில் மக்கள் தொகையில் எல்லாவற்றி லுமே பெரிய நாடு! இத்தகைய சோழர் நாடு; இன்றைக்கு ஆதிக்கப் பிடிப்பிலிருந்து விடுபட்டுள்ள வளநாட்டை நட்பு முறையில் அங்கீகரித்து அதன் சுதந்திரத்துக்கும் சுக வாழ்வுக் கும் உறுதுணையாக இருக்க வேண்டுமேயன்றி அடிமையாக் கும் தன்மையில் அங்கீகாரம் அளிப்பது எம்மைப் போன்ற உரிமை வேட்கையுள்ளவர்களால் ஒப்புக்கொள்ளக் கூடியதா?" 310