உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாத் - சோழ வேந்தனுக்கு எதிராகச் சொல்லப்பட்டது அந்தப் பதில் என்ற போதிலும் - அந்தப் பதில் கேட்டு அக்களதேவர் சீற்றம் கொள்ளவில்லை. பொன்னர் -சங்கரின் விவேகம், வீரம் இரண்டையும் இணைக்கும் உரிமை தாகம் இவற்றை எண்ணிப் பார்த்து மனத்துக்குள் மகிழ்ந்து பாராட்டிக் கொண் டார். அவர்கள் மீது அவருக்கு மேலும் ஒரு படி மதிப்பு உயர்ந்தது. இருப்பினும் அவர்களது முடிவை உடனடியாக ஏற் றுக் கொள்ளாமல் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார். < "அப்படியானால் நட்பு அடிப்படையிலே கூட சோழ நாடு உங்களோடு உறவு கொள்ளத் தயாராயில்லை என வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் விரும்புகிறபடி வளநாடு சுதந்திர பூமி யாக நீடிக்குமா? நீடிக்க முடியுமா? தலையூர்ப் படையும் அத னைச் சார்ந்த பதினெட்டு நாட்டுப் படைகளும் பெரும் படை யெடுப்பு ஒன்றை வளநாட்டின்மீது நடத்தினால் உங்கள் சுதந் திரம் நிலைக்குமா?" சங்கர் இதயத்தில் ஒரு சவுக்கடியின் மின்னல் வீச்சு.சுளீர் என்று! துடித்துப் போய் விட்டான்! "உறையூர் சோழருக்கு ஒன்றுரைப்பேன்! இளங்கன்றுகள் பயமறியாது துள்ளுவதாக எண்ணிட வேண்டாம்! எவருக்கோ பணிந்து. வளைந்து, குனிந்து - அடிமையாக இருப்பினும் பர வாயில்லை; ஆட்சிச் சுகத்தை அனுபவித்தால் போதுமென்று நாங்கள் அலையவில்லை. எதிரிகளின் பிரளயம் போன்ற படை வரிசைகளால் தாக்குண்டு நாங்கள் பிணமானாலும் சரி; சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டே சாகிறோம் என்ற நிம்மதி மட்டும் எங்களுக்குப் போதுமானது! அதற்கு மாறாக தங்களின் படைவீரர்களின் துணையைப் பெற்று; பகையை அழித்துவிட்டு -தங்களுக்கு நாங்கள் சுப்பம் கட்டுகிற அடிமை யாக இருப்பதை எங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடிய வில்லை. அப்படித் தூக்கத்தில் ஒரு கனவு கண்டால் கூட அது எங்கள் வீரத்துக்கும் உரிமை வேட்கைக்கும் பெரும் இழுக்கு மன்னரே; பெரும் இழுக்கு! அந்தக் கனவுக்குப் பிறகு நாங்கள் வாழ்வதே கூட இந்தப் பூமிக்குப் பெரிய சுமை!' .. சங்கரின் உரை அக்களதேவரை உலுக்கி விட்டது. தாவிப் பாய்ந்து அவனை இறுகத் தழுவிக் கொண்டார். அதே போல் பொன்னரையும் இழுத்துச் சேர்த்து அணைத்துக் கொண்டார். அவரது கண்களில் புத்தொளி! அவையோரைப் பெருமிதத் துடன் நோக்கினார்! பூரிப்பு பொங்கிடப் பேசினார்! 311