உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி - னுடையதே தவிர அவளுடையதாக எப்படி இருக்க முடியும்? உறையூர் இளவரசியாக இருந்திருந்தால் அவள் என்னை எப் படி விரும்பியிருக்க முடியும் என்றுகூட நினைத்துப் பார்க்க முடியாமல் அவளது அங்க அசைவுகளுக்கு அடிமையாகி மான பங்கப்பட்டு விட்டேனே! அழகு, ஆபத்தானது என்பார்கள் அழகு போல ஒப்பனை செய்து கொண்டு வந்த ஆபத்தையே நான் நம்பி மதி மோசம் போய் விட்டேனே! சே! இப்படியும் பெண்களா? உடலை யாருக்கு வேண்டுமானாலும் விருந்தாக அளித்துக் காரியம் சாதித்துக் கொள்ளக் கொஞ்சமாவது கூச்ச 'நாச்சமிருக்காதா? அதைவிடக் கேவலம்: இப்படி சிகப்புத் தோல் போர்த்திய சிங்காரிகளை வைத்துத் தனது சிம்மாசனச் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள நினைக்கும் மானங்கெட்ட மனிதர்களும் இருக்கிறார்களே என்பதுதான்! அந்த மனிதப் பிண்டங்களையும் அவர்களின் கையாட்களாகப் பயன்படும் இந்த மயக்கு மோகினிகளையும் குறைசொல்லிப் பயன் என்ன? வெண்புறாக்களின் சிறகையொட்டிக் கொண்டு வட்டமிடும் இந்த வல்லூறுகளின் வஞ்சகக் கொஞ்சலில் ஏமாந்து போகும் என்னைப் போன்ற முட்டாள்களையல்லவா தண்டிக்க வேண் டும்! அரசரின் மகள் என்றாள்! ஆள் மயக்கியாக வந்து வென்றாள்! அதில் தோற்றது நானல்லவோ? என் தோல்வி- என் இதயத்தில் கண நேரம் மின்னி மறைந்த காதல் உணர் வால் ஏற்பட்ட களங்கமல்லவா? காதல் உணர்வா அது? இல்லை! காமச் சூறாவளி - நிச்சயமாகக் காதலெனும் பூங்காற்று அல்ல! நானாகத் தேடிக் கொண்ட தோல்வியினால் அல்லவா தந்தை போன்ற குன்றுடையார் என்னைச் சிறையிலிட ஆணை யிட்டார். வளநாட்டுக் கோட்டையிலே அமளி என் தாய்; இதோ மரணத்தோடு போராடுகிறார்கள்! அனைத்துக்கும் என் அறியாமையன்றோ காரணம்!' - என் 'சுளீர்! சுளீர்!' இப்படி விழுந்தன சவுக்கடிகள், வீரமலை யின் இதயத்தில். வீரமலையுட்பட அனைவரும் தாமரைநாச்சியாரின் உதடு கள் அசைவதையே கவனித்துக் கொண்டிருந்தனர். "குப்பாயி இளவரசியின் அறைக்கு அகிற்புகைத் தூபம் கொண்டு போய் வைக்கப் போனவள். இளவரசியாக இருந்த வளின் பேச்சைப் பார்த்து ஏதோ சந்தேகப்பட்டிருக்கிறாள். வீரமலையைப்பற்றி அவள் விசாரித்தது ஏன் என்று குப்பாயிக் குப் புரியவில்லை. அதனால் குழப்பமடைந்த குப்பாயி, இள வரசியின் மெய்க்காப்பாளன் வாணவராயன் தங்கியிருந்த 351