உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - எத் செழிப்பையெல்லாம் 'சீ' என இகழ்ந்துரைத்து விட்டு தனை எத்தனையோ இன்னல்களையெல்லாம் ஏற்றுக் கொண்டு இல்வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் எல்லாம் இணை பிரியாதிருந்து தனக்கு வாழ்க்கைத் துணைவியாக மட்டு மின்றி வரும் பொருளுரைத்திட்ட அமைச்சரைப் போலவும் துணை நின்ற தாமரைநாச்சியார்: வாழ்க்கையின் கோடை காலம் முழுவதும் தனக்குத் துணையாக இருந்து விட்டு - இப் போது வாழ்க்கையின் வசந்த காலமாக வளநாட்டு ஆட்சியும், அந்த ஆட்சியைப் பரிபாலித்திட இரு ஆண் சிங்கங்கள் வழித் தோன்றல்களாகவும் விளங்குகிற இந்த நேரத்தில் இப்படி யொரு முடிவை நோக்கித் தள்ளப்பட்டு விட்டாளேயென்ற தாங்க முடியாத சோகத்துடன் குன்றுடையான் அவளது கை களை இறுகப் பற்றிக் கொண்டு, "தாமரை என்னம்மா இப் படி? அய்யோ! என்ன நடந்தது?" என்று விம்மியழுதான். வீரமலை, அப்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நெஞ்சில் வேல் பாய்ந்தது போன்ற துடிதுடிப்போடு அங்கு வந்து சேர்ந்தான். தாமரைநாச்சியாரைக் கண்டதும் 'அம்மா! அம்மா!' என அவன் அலறிய ஒலி, அங்கிருந்தோர் அனை வரையும் கதறிக் கதறி அழுதிடச் செய்தது. வீரமலையைத் தாமரைநாச்சியார் கை ஜாடை செய்து தன் னருகே அழைத்தாள். அவளருகே சென்று பணிந்து குனிந்து, அவள் என்ன சொல்லுகிறாள் என்பதை வீரமலை ஆவலுடன் கேட்டான். .. 'உறையூர் இளவரசியென்று சொல்லிக் கொண்டு வந்தவள் இளவரசியே அல்ல! தலையூர்க் காளியின் தளபதி பராக்கிர மனும், அவனோடு வந்த ஒரு வேஷக்காரியும் நம்மை ஏமாற் றியிருக்கிறார்கள். இதைத் தாமரைநாச்சியார் சொன்ன போது வீரமலையின் மனசாட்சி, அவனை நூறாயிரம் சவுக்குகளைக் கொண்டு தாக் கியது. அத்தனை அடிகளும் அவன் இதயத்தில் ரத்தம் கசிகிற அளவுக்கு விழுந்தன. எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன். இத்தனன் நாள் கட்டிக்காத்து வந்த கடமையுணர்வு எவளோ ஒரு கைகா ரியின் கடைக்கண் வீச்சுக்கு முன்னால் கல்லறைக்குப் போய் விட்டதே! குற்றம் அவள் மீதா? இல்லவே இல்லை! கண் வீசு வது அவள் கற்ற கலை! அந்த வகையில் சிக்கிய குற்றம் என் 350