உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவைகள். 39 தாமரைநாச்சியார், தனது படுக்கையறையில் ரத்த வெள் ளத்தில் மயக்கமுற்றுக் கிடந்தாள். அவளருகே முத்தாயி பவ ளாயி இருவரும் கண்ணீர் கரை புரளத் தேம்பியழுது கொண் டிருந்தனர். அரண்மனையில் உள்ளோர் அனைவரும் அந்த அறைக்குள் வேகவேகமாக மிக்க பரபரப்புடனும் அழுது புலம் பியவாறும் நுழைந்து கொண்டிருந்தனர். அருக்காணியுடன் அங்கு வந்த குன்றுடையான், தனது ஆருயிர்த் துணைவியின் நிலை கண்டு நிலை குலைந்தான். "தாமரை! தாமரை!" என்று குன்றுடையான் கதறி, தாமரை நாச்சியாரின் தலையை அசைத்து அசைத்து அழுதபோது உட லில் உயிர் இழைந்து கொண்டிருந்த காரணத்தால் ஓரளவு மயக்கம் தெளிந்த தாமரை மெல்லக் கண் திறந்து தனது கண் வனை மெத்த பரிவுடன் நோக்கினாள். தாமரையின் முகத்தில் மரண பயம் துளியளவு கூடத் தென் படவில்லை. என்ன தாமரை இது? அய்யோ, இந்த விபரீதம் எப்படி ஏற்பட்டது?" என்று நடுங்கிடும் குரலில் கேட்டுக் கொண்டே குன்றுடையான், மருத்துவர்கள் எங்கே? உடனே அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான். அதற்குள் தாமரை, குன்றுடையானின் கரங்களைப் பற்றிக் கொண்டு, மருத்துவர் வேண்டாம். என் முடிவை யாராலும் தடுக்க முடியாது. நான் உங்களையும் என் பிள்ளைகளையும் என் மருமகள்களையும் எல்லோரையும் விட்டுப் பிரிந்து கொண்டிருக்கிறேன்" என்றாள். அப்போது அவள் முகத்தில் மெல்லிய புன்னகை ஒளியே நிறைந்திருந்தது. தாமரை நாச்சியாரையே குன்றுடையான் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான். தன் மீது கொண்ட தூய அன்புக்காக தாய் தந்தையரையும் தமையனையும் பகைத்துக் கொண்டு, செல்வச் 349