உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• - கலைஞர் மு. கருணாநிதி அம்மா குப்பாயி! பரம்பரை பரம்பரையாக மானத்தோடு வாழ்ந்த குடும்பம் ஒரு குறை எவனும் சொன்னது கிடை யாது. இந்தக் குடும்பத்தைப் பற்றி - அப்படிப்பட்ட மரியாதை யுள்ள குடும்பத்துக்கு இப்படியொரு மானக்கேடு வந்ததே யம்மா!, தந்தை சந்தேகப்படுவது சரிதான் என்று அவளுக்குத் தோன் றியது. தன் கன்னத்தில் ஏற்பட்ட காயத்தைப் பற்றி அவள் என்ன கற்பனை செய்துகொண்டாளோ அதையேதான் அவ ளது தந்தையும் எண்ணுகிறார் என்கிறபோது அவள் இதயம்; கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில் விழுந்து துடிப்பது போலாயிற்று. அப்பா!" எனக் கதறி, அவரது கால்களைப் பிடித்துக் கொண்டு விழுந்தாள். சங்கர் அவளைத் தூக்கி நிறுத்தினான். உணர்ச்சிவயப்பட்ட பச்சனா முதலியாருக்கு சங்கர் ஆறுதல் கூறி அமைதியாக இருக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். "குப்பாயிக்கு நமது குடும்ப கெளரவம் கெடுவது போல எதுவும் நடந்து விடவில்லை, வீணாகக் குழப்பிக் கொள்ளா தீர்கள்” என்று அவரை சமாதானப்படுத்தினான்.பச்சனா முதலியாரும் அவசரத்தில் தனது மகளின் மனதைப் புண் படுத்திவிட்டோமோ எனப் பயந்து பேச்சின் போக்கை மாற்றுவதற்காக குன்றுடையான், தாமரை நாச்சியாரின் திடீர் மறைவு பற்றித் தன் மகளிடம் கூறிடலாமெனக் கருதினார். எனவே, அவளது தோள்பட்டையில் தனது கையை வைத்து. அவளை அரவணைத்தவாறு, "ஏனம்மா உனக்கு வளநாட்டில் நடந்ததெல்லாம் தெரியுமா?" என்று ஆரம்பித்தார். அதற்குள் அந்தத் துயர நிகழ்ச்சிகளை அவளிடம் சொல்லத் தேவையில்லையென்று நினைத்த சங்கர், “அதெல்லாம் பெரிய கதை! ஒரு வார்த்தையில் சொல்லக் கூடியதா? குப்பாயி! நீ முதலில் போய் உடைகளை மாற்றிக் கொண்டு வா! பிறகு சாவகாசமாகப் பேசலாம்!" என்று அவளை அவரிடமிருந்து பிரித்து உள்ளே அனுப்பி வைத்தான். அவள் உள்ளே போன தும் சங்கர் பச்சனா முதலியாரைப் பார்த்து, 'அய்யா! இரண்டு நாட்களுக்கு மேலாக குப்பாயி பெரும் ஆபத்தில் சிக்கி விடுபட்டிருக்கிறாள். அவள் உள்ளம் ஏற்கனவே துன்பத் தின் சுமை தாங்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் அவளிடம் எங்கள் தாய் தந்தைக்கு ஏற்பட்ட முடி - 383