உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வும் படாமலே பூச்சி பொட்டு எதுவும் கடிக்காமலே தோல் பகுதியில் நமைச்சல் எடுப்பது போல - அவர்களின் நெஞ்சில் வஞ்சகம் வளைந்து நெளிந்தது! தீயோரின் இயல்பு அதுதானே! - மாயவர் தலையூருக்கு வந்து தன்னுடன் பேசுவதற்கு ஒப்பு தல் அளித்துவிட்டார். அதனால் மகிழ்ச்சியுற்றிருந்த காளி மன்னன், அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிப் பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தான். தனது ராஜப் பிர தானியரையெல்லாம் அழைத்து ஆலோசனை நடத்தினான். தலையூர் நாடும் அதன் துணைப் பகுதிகளாக விளங்கும் பதி னெட்டு வேட்டுவர் குல நாடுகளும் பெரிதும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் தலையூர் நாடு, போர் வெறியை அறவே விடுத்து அமைதி உருவாகச் செயல்படுவது தான் அறிவுடைமையாகும் எனத் தனது மனசாட்சி இடித் துரைத்ததாகவும் அதனால்தான் வளநாட்டுடன் சமரசம் செய்து கொள்ள மாயவரை அழைத்திருப்பதாகவும் ராஜப் பிரதானி யிடம் விளக்கமளித்தான். மாயவர் வந்தவுடன் முதற்கட்டமாக அவருடன் காளி மன்னன் மட்டுமே தனித்து உரையாடுவ தென்றும் அடுத்த கட்டமாக ராஜப் பிரதானியர் கூட்டத்தில் விவாதிப்பதென்றும் முடிவாகியது. நாள் முழுவதும் போர் முரசத்தின் சப்தமே கேட்டுக் கொண்டிருக்கும் தலையூர் வீதி களில் இனிமேலாவது குடிமக்களின் வாழ்வுப் பிரச்சினை யில் அக்கறை காட்டப்படுவதற்கான அறிகுறி தோன்றியுள்ளதே எனக் கூறி ராஜப் பிரதானியர் பெரும்பாலோர் களிப்படைந் தனர். காளி மன்னன், கோயில் பூசாரி செம்பகுலனை உடனே அழைத்து வரச் சொல்லி, மாயவர் வந்தவுடன் முதலில் காளி கோயில் பூஜைதான் நடைபெற வேண்டுமென்றும் ஆலயத் தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் வைப்பதோடு. அம்மனுக்கும் வளநாடு, தலையூர் நாடு ஆகிய இருநாடுகளின் நன்மை கோரி லட்சார்ச்சனை தொடங்க வேண்டுமென்றும் ஆணை பிறப் பித்தான். - - அவன் மனத்திற்குள்ளேயே ஒரு கற்பனை விட்டது போலவும் போலவும் - - - - மாயவர் வந்து அவருடன் மனம் விட்டுப் பேசியது அவரும் கடந்த காலத்து வேம்பனைய நிகழ்ச்சி களையெல்லாம் மறந்துவிட்டு இனிய முடிவுகள் உதயமாக உதவியது போலவும்! "என் அழைப்பு கண்டு ஒரு சிறிதும் சலனமடையாமல் தாங்கள் வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி!' 404