உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.. . கலைஞர் மு. கருணாநிதி 'தலையூர் மன்னனுக்கும் புதிய தெளிவு ஏற்பட்டுள்ளது கண்டு நானும் பேருவகை அடைகிறேன். படைக்கலன்கள் மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும் என்ற பிரச்சினைகளை இணக்கமாகக் கலந்துரையாடுவதின் மூலமும் தீர்த்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் எழுந்துள்ளதே வரவேற்கத் தக்க தல்லவா? 'தனிப்பட்ட முறையில் எனக்கும் பொன்னர் சங்கருக்கு மிடையே மூண்டுள்ள பகை பற்றி நான் கவலைப்படவுமில்லை. அதற்காக அஞ்சிடவுமில்லை. ஆனால் நான் பயப்படுவதெல் லாம், இந்தப் பகை வேட்டுவர், வேளாளர் எனும் இரு குலத் தாருக்கிடையே ஒரு நோய் போலப் பரவிடக்கூடுமோ என் பதற்காகத்தான்! அதை எப்படியும் தவிர்க்கவேண்டுமென்பதற் காகவே தங்களைச் சந்திக்க விரும்பினேன்! "எனக்கும் அப்படி ஒரு பொதுவான கவலை உண்டு என்ப தால்தான் பொன்னர் சங்கருக்கு நிலைமையை எடுத்துக் கூறி, இங்கே வந்துள்ளேன். ஆனால் எனக்கொரு சந்தேகம்! இந்த சமரச ஏற்பாட்டுக்கு செல்லாத்தாக் கவுண்டர் குறுக்கே நிற்பா ரல்லவா?" அது தவறான சந்தேகம்! தங்களை அழைத்துப் பேசி இரு நாடுகளுக்கும் நட்பை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர் தணியாத ஆசை கொண்டவராக இருக்கிறார். "அப்படி அவர் சொல்லக் கூடும். என்ன இருந்தாலும் வளநாட்டின் அதிபராக வாழ்ந்தவர் எத்தனை நாளைக்குத் தலையூரின் அரண்மனை விருந்தினராகத் தங்கியிருக்க,அவரது மனம் இடந்தரும்? அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் கண்டு பிடிக் கும் ஆற்றலுடையவர் மாயவர் என்பது எனக்குத் தெரியாதா? சரியாகவோ தவறாகவோ நாடாண்டவர் அவர் என்பதை நாமும் எண்ணிப்பார்த்து. அவர் மூலம் சலசலப்பு எழாமல் ஒரு சமரசத்துக்கு வருவது நலம். "இரண்டு சிங்கங்கள் இரையைப் பங்கிட்டுக் கொள்ளும் போது நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு தொலைவில் உட்கார்ந்திருக்கும் நரிக்கும் ஒரு எலும்புத் துண்டு தேவைப் படுகிறதோ? 405