உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர் - சங்கர் 44 'அட்டா! சரியாகச் சொன்னீர்கள்! அறிவுக் கருவூலமாயிற்றே தங்கள் மூளை! வள நாட்டுடன் தலையூர் இனி எந்த வம்புக் கும் வருவதில்லை. அதேபோலத் தலையூர் மீது பழைய பகை பாராட்டி வள நாடும் செயல்படுதல் கூடாது! வள நாட்டை செல்லாத்தாக் கவுண்டரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டதற்கு ஈடாக சங்கர மலைக்கோட்டையையோ அல் லது குடையூரையோ அவருக்கு வழங்கி, அவரை வள நாட்டுக் கும் தலையூருக்கும் நண்பராக என்றென்றும் இருத்தல் வேண்டு மென நிபந்தனை விதிப்பது! இதுபோல ஒரு சமரச ஒப்பந்தம் செய்து கொள்ளலாமென்பதே என் கருத்து!' "பங்காளிக் காய்ச்சலால் ஏற்பட்டதே இத்துணைப் பெரும் பகை என்பதை நானும் அறிவேன்! குன்றுடையானுடன் அப் போதே ஒத்துப் போயிருந்தால் செல்லாத்தாக் கவுண்டர் இப் போது தலையூர் வாசலில் தவம் கிடக்கத் தேவையில்லை! தற்காலிகமாகக் கிடைத்த வெற்றிகள் அவரைத் தலைகால் தெரியாத மனிதராக மாற்றி விட்டன! பரவாயில்லை - குடை யூர் மாளிகையா? அல்லது சங்கரமலைக்கோட்டையா? இரண் டில் எதை அவருக்குத் தருவதற்குப் பொன்னர் - சங்கர் சம்ம திப்பார்கள் என்பதை அவர்களுடன் பேசித்தான் தெரிந்து கொள்ள வேண்டும்! .. - 'இந்த ஒரு சந்திப்பில் எல்லாப் பிரச்சனைகளும் முடிந்து விட்டன என்று நான் கருதவில்லையெனினும் நல்ல முடிவு களுக்கு இருநாடுகளையும் அழைத்துச் செல்ல ஒரு பாதை போடப்பட்டு விட்டதாகவே நம்புகிறேன்." "நம்பிக்கை வீண் போகாது! அடுத்த சந்திப்பு தலையூர் வளநாடு ஒப்பந்தத்தில் இரு நாட்டு அரசுகளும் கையொப்ப மிடும் சந்திப்பாகவே இருக்குமென எதிர்பார்க்கிறேன். "எல்லாம் மாயவரின் கையில் தானிருக்கிறது.!' தலையூர்க் காளி மன்னன், மாயவரைப் பரிவோடு தழுவிக் கொண்டு, அவரது கரங்களை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொள்கிறான். தனது கற்பனை, வெறும் கற்பனையாகவே போய்விடாமல் விரைவில் நடக்க வேண்டுமேயென்று கவலையுடன் எண்ணிய அவன், தலையூர் காளியம்மன் கோயில் இருக்கும் திசையை நோக்கிக் கை கூப்பித் தொழுது, "தேவீ! எல்லாம் நன்றாக .406