உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கலைஞர் மு.கருணாநிதி 'சொல்லுகிறேன் - சொல்வதற்குத்தானே அவசரமாக வந் தேன்! சொல்வதுதானே என் கடமை! மாயவரை காளியம்மன் கோயிலில் வரவேற்றுப் பூஜை நடத்தும் ஏற்பாடுகளை கவ னிக்க செம்பகுலன் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தபோது அவ னது பாதுகாப்பில் இருந்த நமது காட்டுப்பன்றிகள் கொட்டடிக் களை உடைத்துக்கொண்டு வெளிக்கிளம்பி விட்டன. அவற் றைத்தேடிக் கொண்டுபோன செம்பகுலன் அவற்றைக் காணா மல் திரும்பிவந்து, மீண்டும் தேடுவதற்காக வேறு திசையில் ஓடியிருக்கிறான். அதற்குள், பன்றிகள், மதுக்கரையோர முள்ள பயிர் பச்சைகளைத் தின்றும் நாசமாக்கியும் ஆர்ப்பாட் டம் செய்துகொண்டிருந்திருக்கின்றன. அந்த வழியாக வந்து கொண்டிருந்த மாயவர் கண்களில் அந்தக் காட்சி பட்டு விடவே உடனே அவர் ரதத்தை விட்டிறங்கி பன்றிகளை விரட் டியிருக்கிறார். நமது அரண்மனை பன்றியைத் தாக்கினால் அது சும்மாயிருக்குமா? காயம் பட்ட வேகத்தில் அது மாய வரின் உயிரைக் குடித்துவிட்டுத் தானும் அதே இடத்தில் மாண்டுவிட்டது! பாவம். பயிர்பச்சைகள் நாசமாகக் கூடாது. என்று பரிவு காட்டப் போய் அந்தப் பரிவு மாயவரின் உயி ருக்கே எமனின் பாசக்கயிறாக மாறி விட்டிருக்கிறது!" காளி மன்னன் ஓரளவு ஆறுதல் பெற்றான்! மாயவர் சாவுக்கு எந்த சதித் திட்டமும் காரணமாக இருந்திருக்க முடியாது என்பதைச் செல்லாத்தாக் கவுண்டரின் விளக்கத்திலிருந்து அவன் தீர்மானித்துக் கொண்டதால் தனது மனச்சாட்சி அறிய மாயவரின் சாவுக்கு அவனோ அல்லது தலையூரோ பொறுப் பல்ல என்பதில் அவனுக்கு ஒரு நிம்மதி! செல்லாத்தாக் கவுண் டரிடம் மேலும் ஒரு விபரமறிய அவன் விரும்பினான். "இந்த உண்மை எப்படித் தெரிய வந்தது தங்களுக்கு? - இதே ரத வண்டியில் காயம் பட்டுக்கிடந்த ஒரு வீரன் - அதா வது வளநாட்டு வீரன் - அவனை நமது தலையூர் மருத்துவர் வீட்டில் வீரமலை சிகிச்சைக்காகச் சேர்த்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறான். அந்த வீரனிடம் விசாரித்தேன். அவன்தான் வழியில் நடந்த விஷயங்களையும் விதி எப்படி விளையாடி விட்டது என்பதையும் சொன்னான். பயிர்பச்சைகளை துவம் சம் செய்துகொண்டிருந்த பன்றிகளை விரட்ட மாயவர் மட்டும் முனையாமல் இருந்திருந்தால் இந்த விபரீதம் ஏற்பட்டே யிருக்காது!" 425