உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் நடந்தது ஒன்று ஆனால் வீரமலை நினைப்பது ஒன்று! மாயவர் மரணம் - வீரமலையைச் சிறையிட்டிருப்பது - இந்தச் செய்திகளைக் கேட்டால் பொன்னர் - சங்கர் பொங்கியெழுந்து போருக்குத் தானே புறப்படுவார்கள்! .. 'ஆமாம்! ஆனால் ஒன்று -அவர்களுக்குத் தவறான செய்தி போய்ச் சேருவதற்குள் சரியான தகவலை அவர்களுக்கு நாம் அனுப்பியாக வேண்டும். அது மட்டுமல்ல, இன்னமும் தலை யூர் நாடு வளநாட்டுடன் சமாதானம் செய்து கொள்ளவே விரும்புகிறது என்பதைப் பொன்னர் சங்கருக்குத் திட்ட வட்டமாகத் தெரிவிக்கவேண்டும்." - 'ஓலையனுப்பி மாயவரை அழைத்தோம் அது இப்படி யாகிவிட்டது! இனியொரு தூதுவரை அனுப்பி சமாதானப் பேச்சுக்குத் தயார் என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? - "மாயவர் கொல்லப்பட்டது எதிர்பாராதது என்பதையும் அவராலேயே அவருக்கு முடிவு ஏற்பட்டது என்பதையும் அதைத் தவறாகக் கருதவேண்டாம் என்பதையும் பழிக்குப் பழி என்று கர்ச்சிக்கும் வீரமலையை வேறு வழியின்றிதான் சிறையில் வைத்திருக்கிறோம் என்பதையும் - சமாதானப் பேச் சின் முதல் கட்டமாக வீரமலையை விடுதலை செய்யத் தயா ராக இருக்கிறோம் என்பதையும் உடனடியாகப் பொன்னர் சங்கருக்கு அறிவித்தாக வேண்டும்!' .. இதனை அவர்களுக்கு யாரை அனுப்பி அறிவிக்கலாம்? யாரை அனுப்பினால் நம்புவார்கள்? எனக்கு ஒன்றுமே புரிய வில்லையே! தலையூரான் யுத்த தர்மம் தவறி செயல்படுகிறான் என்ற களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவே நான் இன்னமும் கவலைப் படுகிறேன்! - - "அப்படியொரு கவலையே வேண்டாம்! போர் வேண்டாம் என்று பொன்னர் சங்கரிடம் தெரிவிக்கவும் சமாதானக் கொடியைப் பறக்கவிட அவர்களின் சம்மதத்தைப் பெறவும் நம்மிடம் ஒரு சரியான ஆள் இருக்கிறான்!' யார் அது? 3 3 சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்! நண்பர்களை அனுப்பு வதைக் காட்டிலும் - யாரைப் பகையென்று கருதுகிறார்களோ அவர்களை அனுப்பினால் - அவர்களிடம் பொன்னர் - சங்கர் பவ்யமாக நடந்து கொள்வார்கள் என்பது நிச்சயமான உண்மை!' 426 -