உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் யைத் திறந்து மரகதப் பச்சை மாணிக்கக் கிளியைக் கையில் எடுத்துக் காட்டினான். பளபளக்கும் அந்தக் கற்களின் ஜோதி மழையில் அந்தக் கிளியும் கூண்டும் பேழையும் அந்தப் பெண் களின் கண்களைப் பறித்தன! இதை ஏன் நீ தேடிச் சென்றாய்? உன் கையில் இது கிடைக்க ஏன் பிரார்த்தனை செய்து கொண்டாய்? உன்னால் இதை எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது?' அருக்காணித் தங்கம் ஆவல் பொங்கிட வினாக்களை அடுக் கினாள். 44 "ராக்கியண்ணரின் இறுதிச் சடங்கின்போது அவர் எழுதி வைத்திருந்த மரண சாசனம் படிக்கப்பட்டபோது அந்தப் பெருங் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன்! எனக்கு ராக்கியண்ணர் மீது ஒரு மதிப்பு, மரியாதை, பக்தி எப்போதும் உண்டு! சிறு பிராயத்தில் அவரிடம் வில்வித்தை கற்றுக்கொண் டவன் நான்! இந்தக் கிளி, மாரிக்கவுண்டன் பாளையத்தில் அவரது பாசறையிலேயே அவரது நினைவுச் சின்னமாக வைக் கப்பட வேண்டுமென்பது என் ஆசை! இதை வளநாட்டின் இன்றைய மன்னர்களான பொன்னர் சங்கர் எடுத்துத் தங்கள் தங்கைக்குப் பரிசாக அளிப்பதற்கு முன்பே நான் கண்டு பிடித்து எடுத்து மாரிக்கவுண்டன்பாளையத்தில் ராக்கியண் ணன் பாசறையில் வைப்பதென்று முடிவு செய்தேன். வீரப்பூர் காட்டிலும் அதனையொட்டிய பகுதிகளிலும் வேட்டைக்குச் செல்லும்போதெல்லாம் இதைத் தேடி அலுத்தேன்! பிறகுதான் பெரிய காண்டியம்மனுக்குப் பிரார்த்தனை செய்து கொண் டேன். தேவி கருணை காட்டி என் வேண்டுதலை நிறைவேற்றி வைத்தாள். நான் தேவிக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும். தயவு செய்து வழிவிடுங்கள்!' "இதற்காக போய் ஒரு கண்ணைப் பறிகொடுப்பார்களா?" .. தலையையே அறுத்துக் கொடுத்து ஆண்டவனை நினைத்து தவம் செய்தவர்கள் எல்லாம் உண்டு தாயே! "வேடனே! உன் மன உறுதியைப் பாராட்டுகிறேன் பெயர் என்னவோ?" - உன் "வேலப்பன் என்பார்கள் - அதாவது தான் வேலைக் குறி பார்த்து வீசினால் அந்தக் குறி தப்பாது என்பதால் எனக்கு அப்படியொரு பெயர்! 432