உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி "சரி வேலப்பா! முதலில் இந்தக் கிளியுடன் நாம் வள நாட்டு அரண்மனைக்குப் போய் என் அண்ணன்மார்களைச் சந்திப்போம்! 'அய்யோ! வேண்டாம் - வேண்டாம் - அவர்கள் இதைப் பிடுங்கிக் கொண்டு என்னை அடித்து விரட்டி விடுவார்கள்!" 'அப்படியெல்லாம் என் அண்ணன்மார்களைப் பற்றித் தவ றாக நினைக்காதே! ராக்கியண்ணர் பாசறையில் இந்தக் கிளியை நினைவுச் சின்னமாக வைப்பதென்றால் அவர்கள் எந்தத் தடையும் சொல்லமாட்டார்கள். மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்! வா எங்களோடு! அரண்மனைக்குப் போகலாம்!" "பெரியகாண்டிக்கு நான் செலுத்த வேண்டிய காணிக்கை யைச் செலுத்தாமல் இங்கிருந்து ஒரு அடி கூட நகர மாட்டேன்! தேவியின் கோபம் பொல்லாதது! பிறகு அவள் என் இரண்டு கண்களையும் அணைத்து விடுவாள்!' 'நீ நீ காணிக்கை வழங்குவதை நாளைக்குப் பெரிய பூஜை நடத்தியே அம்மன் கோயிலில் நிறைவேற்றலாம்! முதலில் அண்ணன்மார் இந்தக் கிளியைக் காணட்டும்!' செம்பகுலன் யோசித்தான். பிறகு கைகளைத் தலைக்கு மேலே தூக்கி அம்மன் சந்நிதியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டே அம்பிகே! என்னை மன்னித்து விடு! அரண் மனை உத்திரவுக்கு அடங்கி நான் நடக்கவேண்டியிருக்கிறது! நாளைக்கு வந்து என் காணிக்கையை உன் காலடியில் செலுத்து கிறேன்! என்று பக்திரசம் சொட்டச் சொட்டக் கூவினான். வளநாட்டு அரண்மனைக் கூடத்தில் மரகதப்பச்சை மாணிக் கக் கிளி, பட்டு விரித்த ஒரு மேடையில் வைக்கப்பட்டிருந்தது. அதன் அழகான வேலைப்பாடுகளை பொன்னரும் சங்கரும் வெகுவாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அருக்காணி தங்கம். முத்தாயி, பவளாயி, மற்றும் அருக்காணி தங்கத்தின் தோழிகள் அனைவரின் விழிகளும் அந்தக் கிளியின்மீதே மொய்த்திருந்தன! ஒரு தூணின் ஓரமாக வேலப்பன் வேடத்தி லிருக்கும் செம்பகுலன் மெத்த மரியாதையுடன் அடங்கி ஒடுங்கி நின்று கொண்டிருந்தான். பொன்னர் வேலப்பனை நோக்கி, 433