உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி வாள் வீரனைத் தேடி உத்தமி வீரமலை வனத்தில் வாரபோது ஆனை நெருஞ்சி முள்ளு அண்ணா அதிலே அடிவைத்து வாராளிப்போ! கோரிரண்டம் முள்ளு அந்த வனத்தில் குறுக்கே கணவாயாம் 1 சில்லென்ற காடும் செடியும் வனாந்திரமும் கல்லும் மலையும் அண்ணா அதைக் கடக்கவென்றால் வெகுதூரம்! எண்ணாது எண்ணியேதான் உத்தமி புண்ணாய் மனது நொந்து. நான் ஒருத்தி வழிநடப்பதற்கு நீங்கள் உற்ற துணை வர வேண்டும் நான் பெண் பிறந்த பேதையெனக்கு பெரிய துணை வரவேணும்! நான் வனத்தில் நடப்பதற்கு நீங்கள் வாய்த்த துணை வரவேணும்! வரவேணும்.' நான் காட்டில் நடப்பதற்கு நீங்கள் கடிய துணை அருக்காணியுடன் அவள் தோழிகளும் அயர்வறியாது தொடர்ந்து நடந்தனர் படுகளம் நோக்கி! அண்ணியார்களைப் பறிகொடுத்த தங்கை அருக்காணி, வீரப்பூர் படுகளம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறாள் வீரப்பூர் களத்திலோ அன்புத் தம்பி ஆருயிர்த் தம்பி அணுப்பொழுதும் தன்னை விட்டு அகலாத அருமைத் தம்பி மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந் தர். அவர் வழி வந்தோர் பூனைகள் அல்லர் புலிநிகர் தமிழ் மாந்தர் எனும் இலக்கணத்திற்கொப்ப வீரமரணத்தை வலுவில் அழைத்து வாரித் தழுவிக்கொண்டான் என்ற செய்தி, இவையனைத்தும் வழியிலே கிடைக்கிறது; போர்ப்படையுடன் வந்துகொண்டிருக்கும் பொன்னருக்கு! - தம்பி, தங்கை யாராயினும் பிறகு வந்து பார்த்துகொள்ள லாம் - முதலில் தலையூர் நோக்கிச் செல்லட்டும் படைகள்! என ஆணை பிறப்பித்தான் பொன்னர்! அதற்கிடையே தலையூரில் காளி மன்னரின் ஆதிக்கத்திற் குட்பட்ட பதினெட்டு நாட்டுப் படைகளும் தலையூர் நகருக்கு வந்து குவிந்தன. 5.19