உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி வட்டமிட்டுத்தான் திரும்பி வருகுதே அப்புரவி வெட்டுவாத்துறை வழியாய் மதுக்கரையும் தான் கடந்து, விண்பறந்து - மண்பறந்து புரவி, மேகமெல்லாம் தட்டைய நாடும் தாராபுர நாடும் தாண்டி வரும். பள்ளிப் பொதிநாடு பருத்திப் பொதிநாடு வெத்திநாடு வேங்கலநாடு இவையெல்லாம் வெட்டியே ஆத்தூரு பின்னம் அடுத்த பவுத்திரமும் காங்கய நாடும் கருவூர்ப் பதிநாடும் பூந்துறை நாடும் புகழ் பெரிய நன்னாடும் ஓமல் நாடு ஓங்கு புகழ் அறையநாடு கிழக்கு வளநாடு கீர்த்தியுள்ள மேனாடு பெரிய மலையாளம் பெருந்துறையும் நன்னாடு வேடுதளம் உள்ளதெல்லாம் பொன்னர் வெட்டித் தகர்த்தெறிந்து : சங்கரித்து பொன்னர். வெற்றிமேல் வெற்றி குவித்திட்டான். தலை யூர்ப் பகுதியில் மட்டும் வெகு தொலைவுக்கு அமராவதி ஆற் றின் கரையில் வேலிபோல் நிறுத்தப்பட்டிருந்த படையை ஏமாற்றி விட்டு, பலதிசைகளிலும் பொன்னர் படை நுழைந்து, அமராவதி நதியின் அக்கரைக்கு வந்துவிட்டது. ஆனால் அதற் காக வளநாட்டு வீரர்கள் பலரை அமராவதி ஆற்றுக்குப் பலி கொடுக்க வேண்டியிருந்தது. வேடுதளங்களில் இருந்து அம்பு களை மழை போலப் பொழிந்து எதிரியைத் திணற அடிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற தலையூர்ப் படை வீரர்கள், பொன்ன ரின் பலமுனைத் தாக்குதலைச் சந்திக்க முடியாமல் திக்குமுக் காடிப் போயினர். எரிமலை குமுறிக் கொண்டிருக்கிறவரையில் பரவாயில்லை, ஆனால் அது வெடித்துக் கிளம்பி வானோக்கி நெருப்புக் குழம்பை வாரி வீச ஆரம்பித்தபிறகு - அது. தானாக அடங்கு கிற வரையில், யார் போய் அதனை அணைத்து நிறுத்த முடியும்! அப்படித்தான் பொன்னர் நடத்திய போர் இருந்தது! குதிரை களோடு வீரர்கள் அவன்மீது பாய்ந்தனர் - எனினும் பாய்ந்த வேகத்தில் குதிரைகளும் அவர்களும் இருகூறுகளாக வீழ்ந்து மாய்ந்தனர்! அடுக்கடுக்காக பத்து, ஐம்பது, நூறு எனக் கணை கள் பொன்னரைச் சூழ்ந்து பறந்து வந்தன எனினும், அவை வந்த மாத்திரத்திலேயே பொன்னரின் வாள் பட்டுப் பொடிப் பொடியாகப் புழுதியில் மறைந்தன! வந்து வந்து தாக்கும் (புலவர் பிச்சையின் அண்ணன்மார் சுவாமி" பாட சிறு திருத்தங்களுடன்) லில் 523