உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வாட்களையும் ஈட்டிகளையும், ஏதோ வரவேற்பு விழாவில் தன்மீது பெய்திடும் மலர்களைப்போல அலட்சியப்படுத்தியவாறு சுழன்று கொண்டிருந்தான் அந்த மாவீரன் பொன்னர்! - - - குன்றுடையார் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமை தந்தையின் வேதனை - தாயாரின் துயரம் மாயவருக்கு நேராக ராக்கியண்ணருக்குத் தந்த வாக்குறுதி - ஏற்றுக் கொண்ட சூளுரை - தம்பி சங்கரின் அன்பு முகம் வீரமலையின் திரு வுருவம் - வையம்பெருமானின் வீழ்ச்சி - குப்பாயி மறைவு அருக்காணியின் கண்ணீர் - இத்தனையும் பளீர் பளீர் எனப் பொன்னரின் இதயத்தில் தோன்றித் தோன்றி மறைந்தன! மறைந்து மறைந்து தோன்றின! பின்னர் மறையவே இல்லை! தோன்றியவை தோன்றியவைகளாகவே நிலைத்தன! - . - கால்கைகளை அமராவதி ஆற்றங்கரையில் தலையூர்ப் படைகளும் வள நாட்டுப் படைகளும் தலைகளைப் பந்தாடி வெட்டி உருட்டி உயிரற்ற முண்டங்களை மிதக்க விட்டுக் கொண்டிருந்தபோது, பொன்னர், தனக்குத் துணையாக குறைந்த எண்ணிக்கையே உள்ள குதிரை வீரர்கள் சிலருடன் தலையூர்க் கோட்டை முகப்புக்கு வந்து விட்டான். ஊழிக் காலத்து அழிவு என்பார்களே, அதுவே ஓர் உரு எடுத்து வந்ததுபோல புரவியேறி வந்த பொன்னரின் வாள் வீச்சின் சுழற்சியை எதிர்கொள்ள எவராலும் இயலவில்லை. கோட் டைக்குள்ளும் நுழையப் போகிறான் பொன்னர் எனக்கேள்வி யுற்ற தலையூர்க்காளி தனது பதினெட்டு நாட்டுப் படைத் தலைவர்களையும் அமராவதி ஆற்றங்கரையிலிருந்து போர் முனையை மாற்றச் சொல்லி ஆணை பிறப்பித்தான். அனைத் துப்படைகளும் தலையூர்க் கோட்டையை நோக்கித் திரும்பின. அதற்குள்ளாக, பாய்ந்ததோ அல்லது, பறந்து சென்றதோ தெரியவில்லை - பொன்னரின் புரவி எப்படித்தான் தலையூர்க் கோட்டையின் முகப்புக் கொத்தளத்தில் ஏறி நின்றது என்று யாராலும் கணிக்க முடியவில்லை. அந்தப் புரவியின் மீது பொன்னர். வாளை ஓங்கிப் பிடித்த கையுடன் அமர்ந்து வெற் றிச் சிரிப்பு சிரித்தான்! ஆனால் அது, இதயத்தின் அடித்தளத் திலிருந்து பீறிட்டுக் கிளம்பிய மகிழ்ச்சியின் எதிரொலி அல்ல! ஆத்திரத்தின் முழக்கம்! ஆவேசத்தின் பேரொலி! என்னே ஆச்சரியம்! தலையூர்க் காவலன் காளி மன்னனும் அவன் பரிபாலனத்திற்குட்பட்ட பதினெட்டு நாட்டுத் தலைவர் களும் கோட்டையைச் சுற்றி நிற்கிறார்கள்! அந்தக் கோட்டை 524