பக்கம்:பொன்னியின் தியாகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 .ெ எனியின் தியாகம் சுப்பிரமணியம் (வேறுப்போடு) : ஆமாம்-கொடுப் பார்-நீயும் வாங்கி வருவாய்-அந்த லோபியிடம் ஒரு செல்லாக் காசுகூட வாங்க முடியாது. இனி நீ போய் வாங்கி வந்தாலும் அந்தப் பணம் எனக்கு வேண்டாம். தாயார் : இப்படிக் கோபப்பட்டால் காரியம் ஆகுமா? சுப்பிரமணியம் : ஆகா வி ட் டா ல் போகிறது. அவரிடம் வாங்கி வியாபாரம் பண்ணினல்கூட உருப்படி யாகாது. அந்த விவைாரமே வேண்டாம். ቆ டதயார் . பின்னே என்னதான் செய்யப் போருெம்: கம்மா.இருக்க முடியுமா? சுப்பிரமணியம் (உற்சாகத்தோடு) : அந்த நாவல் எழுதினேனல்லவா?-அது அநேகமாக முடிஞ்சு போச்சு. அதைக் கொஞ்சம் மெருகு கொடுத்து வெளியிடப் போகிறேன். -- தாயார் : ஆமான்டப்பா, அதுதான் உனக்கு சோறு போடும். கதை எழுதி யாராவது ஜீவனம் பண்ண முடியுமா? கையிலிருக்கிற காசையும் அச்சாபீஸ்கார னுக்குக் கொடுத்துட்டுத் திண்டாட வேண்டியதுதான்... சுப்பிரமணியம் : அம்மா, என்னுடைய நாவலை அப்படிக் கேவலமாக நினேக்க,வேண்டாம். அப்படியே உணர்ச்சிகளெல்லாம் பொங்கும்படி எழுதியிருக்கிறேன். தாயார் ; நீ என்ன எழுதிமூலும் சரி, இந்த நாட்டிலே கதை எழுதிப் பிழைக்க முடியாது. அதைத் தான் நான் சொல்லுகிறேன். சூப்பிரமணியத்தின் பிழைக்க முடியாது நல்ல நாவல் எழுதிகுல் திச்சயம் பணம் கிடைக்கும். ---