பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கிழுத்த பெரியோர்களும், நாட்டை மீட்க அறப்போர் தொடுத்த ஆண்மையாளர்களும், தோன்றிய நாட்டிலே, எமது தரிசனம் ஜென்மசாபல்யம் தரும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, எங்களைத் தேடி யாத்திரை செய்து வந்து, எமது காலைக் கழுவினால், தனது பாபம் கழுவப்படும் என்று கருதி, பக்தி சிரத்தையோடு, மேலோர் நாங்கள் என்பதை மேதினி அறியும் விதமாக, எம்மை வெள்ளிப் பீடத்திலே எழுந்தருளச் செய்து, தட்சணையும் தந்து, எமது ஆதிபத்யத்தை அவனி அறியச் செய்தாரே, ராஷ்ட்டிரபதி பாபு ராஜேந்திரபிரசாத்! இதுவல்லவா உண்மையான பெருமை—வசிஷ்டர் பாதத்திலே மன்னர்கள் வீழ்ந்தார்களாம், அந்தப் பெருமை ஒரு பெருமையா—உலகம் விழிப்படைந்துவிட்டது, என்று உரத்த குரலில் எவனெவனோ கூவும் இந்த நாட்களிலே, பரந்த பாரத் வர்ஷத்தின் பரிபாலனாதிபதி, முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, காலைக் கழுவினாரே, இதுவன்றோ பெறற்கரிய பெருமை—இதனைக் கண்டன்றோ உலகம் வியப்படையும்! ஜடாமுடிதாரியின் பாதத்திலே மணிமுடிதரித்தவன் பாரத் வருஷத்திலே வீழ்ந்து வணங்கிய காலத்திலே, பாரத் வர்ஷத்திலே மட்டுமல்ல, உலகிலே எங்குமே, குருமார்கள் காலிலே கொலுப்பொம்மைகள் வீழ்ந்து வணங்குவதுதான் முறையாக இருந்தது! புத்தனாம், புதுப்புதுக் கருத்தூட்டும் புரட்சிக்காரர்களாம், அரசுகளைக் கவிழ்த்தவர்களாம், அன்னக் காவடிகளை ஆற்றல் பெறச்செய்த வீரர்களாம், வால்டேராம், ரூசோவாம், லிங்கனாம், தூதராம்,மார்க்சாம், லெனினாம், கமாலாம், சன்யாட்சனாம்,—நீட்டோலை படிக்கிறார்கள் இவர்களைப்பற்றி—இவர்களெல்லாம் தத்தமது கைவரிசையைக் காட்டியான