பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

கூடமும், மலர்த் தோட்டங்களிலே பர்ணசாலைகளும் இருந்த காலத்தில், எதிர்த்தால் இடி விழும் தொட்டால் பஸ்மீகரம் என்று மக்களும் மன்னரும் நம்பிக் கொண்டிருந்த காலத்தில், புத்ரகாமேஷ்டி யாகம் செய்து வம்ச விருத்தி கோரியவர்கள் வாழ்ந்த நாட்களிலே, வேதத்தில் இல்லாதது ஒன்றுமில்லை, வேறெதிலும் இதிலுள்ளது இல்லை, என்று எவரும் நம்பியிருந்த நாட்களில், குருமார்களின் அடி பணிய அரசர்கள் முன் வந்ததும், காலைக் கழுவி கதி மோட்சம் தேடிட காவலர் காத்துக்கொண்டிருந்ததும் ஆச்சரியமில்லை; வசிஷ்டரும் வியாசரும், கண்ணுவரும் அத்திரியும், காகபட்டரும் பிறரும் பெற்ற நிலை பெருமைக்குரியதென்று பிரமாதப்படுத்துவதிலே பொருள் இல்லை; காலம் அப்படிப்பட்டது, ஆனால் இப்போது, இணையில்லாத ஆராய்ச்சி மலர்ந்திருக்கும் இந்நாளில், இலண்டனும் பாரிசும், நியூயார்க்கும் மாஸ்கோவும் போய் வருவது பந்தடி மைதானத்துக்கும் சிங்காரத் தோப்புக்கும் போய் வருவது போன்ற சாதாரணக் காரியம் போலாகிவிட்ட, வேகமான நாகரீகத்தின் விறு விறுப்பு உள்ள நாட்களில், பர்ணசாலைகள் ஒழிந்து போய் பண்டகசாலைகளிலே பணியாட்களாகிப் பாழும் வயிற்றைக் கழுவிடும் நிலைக்குப்பார்ப்பனர்கள் துரத்தப்பட்டு விட்ட இந்த நாட்களில், புரோகிதரின் நடை உடை பாவனை நையாண்டிக்குரியதாகிவிட்ட நவ நாகரீசு நாட்களில், சந்தியாவந்தனத்தை மறந்தவர்களும் ‘சர்வம் கூட்டு மயம் ஜகத்’ என்ற காரிய வாதத்தை, நாலுவேதத்தினும் மேலானது என்று கண்டு கடைப்பிடிப்போரின் தொகை பூசுர இனத்திலே பெருகி இருக்கும் இந்த நாட்களில், துப்பாக்கிக்கு அஞ்சாத தீரர்களும், தூக்குமேடை சென்ற தியாகிகளும், சிறை புகுந்த தொண்டர்களும் செக்-