பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வில்லையே! இந்நிலையில் நாடு இருக்கிறது,டாக்டர், புத்தமார்க்கம் தெரிகிறது, என்று பேசுகிறார்.

குழந்தையைக் கொன்று குளத்தில் போட்டு விட்டு, அதன் காதணியைக் கொண்டுவந்து, கதறும் தாயிடம் கொடுத்து, இதை அணிந்து கொண்டு உன் அருமைக் குழந்தை துள்ளி விளையாடுவதை இப்போது நினைத்துக் கொண்டாலும், என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது, என்று கூறிடும் கதைபோல—கதையிலேயும் இப்படிப்பட்ட காதகன் காணப்படமாட்டான்–புத்த மார்க்கத்தைப் பரவாதபடி தடுத்து, புத்தமார்க்கத்தின் மூலம் கிடைத்த பொன்னொளியைக் காண முடியாதபடி மக்களைக் கருத்துக் குருடர்களாக்கி விட்டு—இப்போது புத்தமார்க்கம், புனித மார்க்கம், அதன் பொலிவு மீண்டும் ஈண்டு தெரிகிறது என்று புகழுரை வழங்குகிறார்கள்.

புத்த மார்க்கப் பொலிவு உள்ளபடி நாட்டிலே கா வேண்டுமென்றால், புத்த மார்க்கப் பொன்னொளி மீண்டும் மக்களுக்குத் தெரியவேண்டுமானால், மக்களின் அறிவுக்கண்கள் திறக்கப்பட வேண்டும்—கருத்தைக் கெடுக்கும் கயவர் எந்தப் பெயருடன் உலவினாலும், எத்துணை உயரத்திலே ஏறிக்கொண்டிருந்தாலும், அதனை அழித்தொழிக்கும் ஆகமையாளர்கள் முன்வரவேண்டும், டாக்டர் ராதாகிருஷ்ண போன்றார், சாஞ்சி விழாக்களிலே பேசிடும் உபசார மொழி மூலம், அந்தப் பொன்னொளியைப் பெற்றுவிட முடியாது. அந்தப் பொன்னொளியைப் பெற, போர்க்கோலம் பூண்டுள்ள பகுத்தறிவாளர்களின் கரம் வலுக்கவேண்டும்! உங்கள் கரம், என்னசெய்யப்போகிறது? புத்தரின் பொன்மொழிகளை மக்கள் உள்ளபடி அறிந்துணர, ஆரிய அந்த