பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

சந்தனமணம் வீசுகிறது என்று பாமரர் நம்பினர்—சொக்கினர். ஓரளவுக்கு மக்களுக்கு விழிப்பு ஏற்பட, பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டன. உலகப் பேரறிவாளர்களின் உரைகளையும் பகுத்தறிவாளரின் பேச்சையும், மக்கள் கேட்டுக் கேட்டு, நமது நாட்களிலே மெள்ளத் திருந்தலாயினர்—ஆரியம் சீறிக் கிளம்பித் தாக்குகிறது.

நிலை இது; நாடு, இவ்வண்ணம்.

நடந்த சதி, சரிதத்தை ஊன்றிப் படித்துச் சிந்திப்பவருக்கு விளங்குகிறது—எனினும், எந்த புத்தமார்க்கத்தைச் சுட்டுப் பொசுக்கத் தமது ஆற்றல் அத்தனையையும் செலவிட்டனரோ, எந்த புத்த மார்க்கத்தை மறைந்திருந்தும் உடனிருந்தும்; உபசாரம் பேசியும், உட்சுலகம் விளைவித்தும் ஒடுக்கினரோ, அந்த புத்த மார்க்கத்தை, நாட்டிலே பெரும் அளவிலே பரவி, ஆரியத்தை வேரறக் களையும் அளவுக்குப் பரவிடமுடியாது என்றநிலை ஏற்பட்டு விட்டதாக நம்பிக்கை பிறந்ததும், அதே புத்த மார்க்கத்தை வெறுப்பதாக வெளியே தெரிய ஒட்டாதபடி தந்திரமாகநடந்து கொண்டும் பாராட்டுதலைக்கூடத் தந்து கொண்டும், வாழ்ந்து வருகிறது ஆரியம். ஜாதி இருக்கிறது—ஜாதியை ஆதரித்துப் பேசும் அறிஞர்களும் உலவுகிறார்கள் அமெரிக்கா வரை சென்று பசுகிறார்கள்! மூட நம்பிக்கை இருக்கிறது—மூதாதையர் ந்த பொக்கிஷம் இது—இதனை இழக்கலாமா என்று மூட மதியினருக்குச் சூது மதியினர் சாகசமாகக் கூறியபடி தான் உள்ளனர்! கட்டுக் கதைகள், காவியம்! வெட்டி வேலைகள், ஆச்சாரம்! வீணருக்குவாழ்வளிக்க, திருவிழாக்கள்! எல்லாம் இருக்கிறது—எதையும் ஆதரிக்கும், துணிவும் இருக்கிறது!} இல்லாமலா, பாபு ராஜேந்திரர், இருநூறு பார்ப்பனர்களின் காலைக் கழுவினார்—நாட்டிலே ‘ரோஷ’ உணர்ச்சிதலைகாட்ட