பக்கம்:பொன்னொளி, அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28



புத்தரை இகழ்வதில்லை—மாறாகப் புகழ்ந்தனர். எந்த அளவுக்கு என்றால், தமது தெய்வங்களிலே ஒருவர், என்ற அளவுக்கு—எந்த முறையிலே என்றால், புத்தர் போதித்ததும் ஆதிரிஷிமார்கள் போதித்ததும், அடிப்படையிலே ஒன்றுதான், எனவே புத்தமார்க்கத்தைக் கொண்டாடுவதற்காக, மூதாதையர் மார்க்கமான ஆரியத்தை விட்டுவிடத் தேவையில்லை, என்று பேசும் முறையிலே!!

ஆரியத்துக்குக் கிடைத்த பிரசாரசாதனம்,-கலை.

பாட்டு, கூத்து, கதை—இவை மக்கள் மனதிலே இலகுவாக ஆரியக் கருத்துக்களைப் பதியவைத்தது. சிற்பம் இந்தக் கருத்துக்களை, மக்கள் மனதிலே நெகிழச் செய்வதற்கான நீண்டகாலத் திட்டமாயிற்று!

மெள்ள மெள்ள, கள்ளத்தனம் வென்றது—வெள்ளை உள்ளத்தினர் பலியாயினர்—புத்த மாக்கம் புனிதவான்களிடம் அடைக்கலம் புகுந்தது—வெளிநாடுகளிலே ஒளிவீசிற்று—பிறந்த நாட்டிலே, மீண்டும் ஆரியமே, அரச மார்க்கமாகிவிட்டது—பாமரரை அணைத்துக்கொண்டது. புத்தர், மகா விஷ்ணுவின் அவதாரம், என்று புகழ்வதுபோலப் பேசி, பகவான் மாகாவிஷ்ணு புத்தாவதாரத்தின்போது, இன்னின்ன பெருஞ்செயல்களைச் செய்தார், பக்தகோடிகளே! இராமாவதாரத்தில், கிருஷ்ணாவதாரத்தில், பகவான் செய்த திருவிளையாடல்களைக் கேளீர் என்று பேசினர்—மக்கள் வீழ்ந்தனர்.

இதுபோல, புத்த மார்க்கத்தின் மூலம், இந்நாட்டுப் பெருங்குடி மக்கள் பெற்றிருக்கக்கூடிய பெரும் பலனை, புத்தறிவை, புத்தொளியை, பொற்கதிரை, பாழ்படுத்தி சனாதனச் சேற்றிலே மீண்டும் மக்களைத் தள்ளிற்று!! சேறு,