பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வால்யூ பெற்றிடுவாங்க 1 என்று விளக்கமாகப் பேசிகுt சித்தலிங்கம். குமாரி மஞ்சுளாவின் கோல மதர் விழிகள் மகிழ்ச்சிப் பரவசத்தில் பளபளத்தன. எங்க மஞசுவோட் கெட்டி யாருக்கும் வராதுங்க!” இயல்பாகச் சிரீத்தாள் மீட்ைசி. "உண்மைதான் :: என்று சிரித்தபடியே சித்தலிங்கமும் ஆமோதிக்கலாஞர், புறப்பட எழுந்த வர் , அம்மா, உங்க கணவர் எங்கே காணுேம்? என்று விசாரித்தார். மஞ்சுளா தவித்தாள். மீளுட்சி, அவர் பாம்பேயிலே இருக்கார். போன வாரம் தான் வந்திட்டுப் போளுர். இன்னமும் கொஞ்சநாளிவே இங்கேயே செட்டில் ஆகிவிடுவாருங்க, ஐயா! " " சந்தோஷம் " என்று சொல்லிவிட்டு அம்மாவிடமும் பெண்ணிடமும் சொல்லிக் கொண்டு விடை பெறலாஞர் பரா சக்தி மூவீஸின் உரிமையாளரான சித்தலிங்கம். மணி ஐந்து, தாயும் மகளும் கோவிலுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். கூடத்துக்கு வந்த மீட்ைசி காலில் சிக்கிய காகிதத் தாளை எடுத்தாள். அவள் முகம் ஏன் அப்படிச்சிறுத்துக் கறுகறுத்துவிட்டது: " அம்மா!. புறப்பட்லாமா? என்று கேட்டுக் கொண்டே கையிலிருந்த மாலைப்பதிப்புப் பத்திரிக்கையைப் புரட்டிக் கொண்டு வந்த மஞ்சுள்வின் வதனம் ஏன் அவ்வாறுபொலிவு இழந்துவிட்டது ?