பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தாய் மகள் ! பழமொழிப் பேச்சு ஒன்று உண்டு. தாயும் மகளும் ஆலுைம் வாயும் வயிறும் வேறுதான் என்பதே அப்பேச்சு, தாயைப் போலே மகள்; நூலைப் போலே சேலை என்னும் பொதுப்படை யான மரபின் விதிக்கு மேற்கண்ட பழமொழி ஒரு விதிவிலக்காக அமைகிறது. நாணயத்திற்கு மறுபக்கம் இருக்குமே அப்படி! அந்த நெக்லலைப் பற்றிய நினைவை மீட்ைசி மீட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. தாய்க்கும் மகளான மஞ்சுளா வுக்கும் நெக்லஸ் பற்றின கவலே நெஞ்சைப் பற்றி நிற்கவில்லை. * அம்மா! :: என்று என்னவோ மறுமொழி பேச வாயெடுத்த நிலவரமும் அப்போதைக்கு அவளுக்கு மறந்து போயிருக்க வேண்டும். பாவம், மஞ்சுளாவின் நெஞ்சை அரித்த சிக்கல் ஒன்ரு, இரண்டா? . அப்போது மீட்ைசியின் கையில் ஒரு காகிதத்தாள் கிட்டி யது. அதில் எண்ணெய் கலந்த மிளகாய்ப் பொடியின் கறை படிந்திருந்தது. ஆம்; மஞ்சுளா பார்சல் கட்டிவந்த தாள்களில் ஒன்று. அந்தத் தாளைக் கண்டதும் அவளது தாயுள்ளம் பதறித் துடித்தது. இந்நிலையிலே, தாயும் பெண்ணும் அவரவர் நிலமையில் தத்தளித்து, தவித்து, அடங்கத் தேவைப்பட்டது ஐந்தே ஐந்து நிமிஷங்கள்தான். அந்த ஐந்து நிமிஷம் ஆயிற்று. சுயப்பிரக்ஞை இருமுனைத் தாக்குதலாகச்.சிலிர்ப்புக் கொடுத்தது. வெயில் என்ருல், நிழல் இல்லாமலா?

மஞ்சு, புறப்படலாமோ?"