பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ‘ ஒ, நான் ரெடி அம்மா! : நானும்தான் ரெடியாக்கும்! . அன்னேயும் புதல்வியும் புறப்பட்டார்கள். முண்டக்கண்ணி அம்மன் கோவிலிலும் சரி, கபாலி கோவி லிலும் சரி, தரிசனம் செய்தபோது தாயும் மகளும் எதிரும் புதிரு மாகவே நின்ருர்கள். மீனுட்சி, கூப்பிய கரங்களுடன் நின்ற தன் மகளைக் கண்ட போது அவளுடைய கண்கள் கசிந்த காட்சியைக் காண நேர்ந்தது. அதேமாதிரியே, மஞ்சுளா கண்மூடிக் கும்பிட்ட தன் அன்னையைப் பார்த்த வேளையில் அவளுடைய விழிகளும் நனந்திருப்பதை அறிந்தாள். உணர்ச்சி வெள்ளத்திற் கு உருவ்ம் அமைத்துக் காண்பித்த பக்திப் பெருக்கின் அந்நிலையை அவர் கள் இரண்டுபேரும் பரிமாற்றம் செய்து கொள்ள நேர்ந்தபோது அவ்விருவரது உதடுகளிலும் உள்ளார்ந்த புன்னகை அழகுக் கோலம் புனேந்திருந்தது. தெய்வமே! என் அருமை மகளே அவள் அத்தான் ஞான சேகரனுக்கே வாழ்க்கைப்பட அருள் செய்! - மீனட்சியின் விண்ணப்பம் இது. தெய்வமே என்.அப்பாவையும் அம்மாவையும் இனியும் சோதிக்காமல் இருவரையும் மீண்டும் ஒன்றுகூடச் செய்1மஞ்சுளாவின் வேண்டுகோள் இது. என்னம்மா?’, * காப்பி சாப்பிட்டுட்டுப் போகலாமா, மஞ்சு? : " வீட்டுக்குப் போய்க் காப்பி சாப்பிட்டுக்கலாயே அம்மா?.