பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 சாயங்காலப் பால் வாங்குவதில்லை. காலம்பற நான் காப்பு குடிக்கலே அந்தப் பால்தான் புது ப்ரொட்யூஸ்ருக்கு உபயோகப் பட்டது, மஞ்சு !” 'இப்போதும்கூடவா அம்மா நீ சிக்கனம் பிடிக்கணும் ?” என்னம்மா மஞசு அப்படிச் சொல்சுட்டே ? இப்போது தான் நான் ரொம்பவும் சிக்கனமாக இருந்தாக வேனுமாக்கும். என் அருமை மஞ்சுவோட கல்யாணம் வாசலுக்கு வந்து எட் டிப் பார்க்கப் போகுதில்லையா ? சினிமா சான்ஸ் கிடைக்கிற துக்கு முந்தி நான்பட்ட கஷ்டம் கடவுளுக்குத்தான் வெளிச் சம்!” என்ருள் மீட்ைசி. அம்மாவின் பேச்சு மஞ்சுளாவின் நெளுசை உலுக்கிவிட்டது, நீ பெற்ற பெண் நான் ஒருத்தி இருகள்றப்ப நீ எதுக்காக அம்மா கஷ்டப்படனும்? உன் வீம்புதான் உனக்கு உயர்வாகப் போயிடுச்சு, இல்லையா அம்மா ?’ என்று குரல் தழுதழுக்கக் கேட்டாள். கேட்டு விட்டு, தாயைப் பரிவுடன் நோக்கிளுள், தெறித்து விழ்ந்த நீர் மணிகளைக் கண்டதும் மஞ்சுளாவுக்கு இனம் புரிந்த ஓர் ஆறு தல் வேர்விடத் தொடங்கியது. அம்மாவுக்கு நல்ல புத்தி திரும்ப ஆரம்பித்திருக்கிறது ! பேஷ் பேஷ் !

மஞ்சு, பழைய குப்பையைக் கிளருதே. என்னேட விம்பு இனிமேலா கை தாழ்ந்து போயிடப் போகுது? ஊஹீம், ஒருகாலும் இல்லே! என் விதி எனக்கு அன்னிக்கும் தெரிஞ்சு தான் இருந்திச்சு; இன்னிக்கும் தெரிஞ்சுதான் இருக்குது : இப்போதைக்கு எனககு உள்ள கவலையெல்லாம் உன்னைப் பற்றியேதான்! அப்புறம் எனக்கென்ன கவலே இந்த மகரா ஜிக்கு சரி, சரி. எனக்குத் தலைவலி வந்தாச்சு. வா. காப்பி சாப்பிட்டுட்டுப் போயிடலாம்!” என்ருள் மீனுட்கி.

தாயின் சொல்லைத் தட்டமுடியுமா மகளால்? ஆளுக்கொரு ப்ரூ காஃகி அருந்திவிட்டு வெளியே வந்தார்கள் மீட்ைசியும் மஞ்சுளாவும்.