பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மறுபடியும் அவள் பெருமையோடு - பெருமிதத்தோடு தனக்குள் சபாஷ் போட்டுக் கொண்டாள்; வங்கதேச விடுதலே போர் துவங்கிய நாளிலிருந்து எவ்வளவோ சபாஷ் போட்டு விட்டாள். நாட்டின் நெருக்கடி நிலமையை நினைவூட்டின, தெரு விளக்குகள், மஞ்சுளா பரபரப்படைந்தாள். ஆ. மணி ஆறு ஆயிட்டுதே அத்தாளுேட 'டாட்ஜ் எங்கேயாவது டாட்ஜ் பண்ணிட்டுத் தோ, என்னமோ? என் கையில் அவசரமாகப் பேச வேணும்னு போன் பண்ணினரே? ஆல்ரைட் இனியும் என ளுலே இந்தச் சந்தடிக்கு மத்தியிலே தாமதிக்க முடியாது அவளுக்கே உரித் தான சுதந்தரப் பண்பு அவளுடைய விழிவட்டங்களில் சுடர் விட்டது. ரசிகப் பெருமக்களிடையே பொங்கி வழிந்து கொண் டிருந்த கடலோரம் வாங்கிய காற்றை அவளும் ரசித்தவாறு, அங்கிருந்து புறப்படத் துடித்தாள் அவள் அழிம்பு செய்த மயிரிழைகள் இப்போது கட்டுப்பட்டன. அப்போது மஞ்சுளா. மஞ்சுளா!...” சட்க் கென்று நின்று, நிதானமாகத் திரும்பிப் பார்த்தாள் அவள். ஆம், அத்தான்தான்; அவள் நோக்கு ஊடுருவிப் பாய்ந்தது. ரோஜா நிறக் காருக்கருகில் நின்று கொண்டிருந்தான் ஞானசேகர்-கம்பீரமாக அவனுக்குப் பக்கத்தில் யாரோ ஒருத்தியும் நின்று கொண்டிருத்தாள்-ஒய்யாரமாக! இக்காட்சியைக் கண்டதுதான் தாமதம், உடனே குமாரி மஞ்சுளாவின் இளம்.நெஞ்சம். கன்னி மனம் ஆனந்தக் கூத் தாடத் தொடங்கிவிட்டதே: பூஞ்சிட்டுக் கன்னங்கள் சாதுர்ய மாக மலரத்தொடங்கிவிட்டனவே!...... ஆஹா - யார் அந்தப் பூலோக ரம்பை?