பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 காலம் கெட்டுக் கிடக்குது, நீ போய்த் தூங்கு இனியாச்சும், நான் போய்க் கதவைத் திறக்கிறேன்,' என்ருள் மீனுட்சி, அவளேயும் அறியாமல் அவளது பெண் மனம் ஏனே கலவரத் தால் கலங்கிவிட்டது. என்ருலும், எந்தத் துன்பத்தையும் எதிர் கொள்ளத் தயாராகிவிட்டவள் போன்று அவளுடைய சலனம் கண்ட முகத்திலே ஒரு புதிய வல்லமை கோடிட்டிருந்தது. மஞ்சுளா தன் சொல்ல இவ்விஷயத்திலாவது தட்டவில்லையே என்று எண்ணி ஆறுதல் கொண்டவளாக நடை தொடர்ந்தாள் ந.ை கடந்தாள். தெருவில் நாய் ஊ8ளயிட்டது. மீளுட்சியின் மேனி அதிர்ந்தது. சமாளித்துக் கொண்டாள்; வாசல் தாழ்வாரத்தை அடைந்தாள். விளக்குப் பொத்தானேக் கை நடுக்கத்தோடு அடித்தினுள். கை நடுக்கம் நெளுசில் பாய்ந்தது; நெளுசம் நடுங்க, நெஞசத்தின் மங்கலத் தாலியும் நடுங்கியது. வெளிச் சத்தின் மையத்தில் நின்றவள் இன்னமும் இருட்டிலே நின்று கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள், பாவம் ! கண்களைத் திறக் தால்தானே-கண்கள் திறந்தால்தானே வெளிச்சத்தின் தத்து வம் புரியும்?-தவம் விளங்கும் 1 கதவைத் தட்டிய நபரை யாரென்று தெரிந்துகொண்டுதான் க்தவைத் திறக்கவேண்டும்! மீளுட்சி சாமார்த்தியசாலி அல்லவா? அவள் கண்களைத் திறந் தாள் - ஆ; இதயத்தின் இதயம் ஏன் இப்படி வீரிட்டு அலறு கிறது? நெளுசைப் பிசைந்துகொள்ள விரல்களைப் பரப்பிவிட்ட வளுக்கு அந்தத் தாலிதான் கிடைத்தது. கனவு காண்கிருளா அவள் ? கண்களைக் கசக்கிக் கொண்டாள். நெஞ்சின் வலி விழிகளையும் தாக்காதா என்ன ? புயலிடைச் சிக்கிய மலர்க் கொடியாக அல்லடுகிருளே, பாவம் ! "மீளுட்சி, சீக்கிரம் கதவைத் திற. போலீஸ் துரத்திக்கினு வருது !” மீளுட்சி கல்லாகச் சமைந்தாள், கொஞ்சிளுரா சுந்தரேசன் ?