பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 தங்க உரிமை கிடையாது! ஆமாம், சொல்லிவிட்டேன்!" என்று முழக்கம் செய்தாள் அவள் மீட்ைசிக்கென்று இப்படி யொரு பயங்கரமான வைராக்கியப் பண்பா ? அம்மா !” என்று. விரிட்டாள் மஞ்சுளா, மறுகணம் அவள் நெஞசைப் பிசைந்து கொண்டே வெட்டுண்ட ரோஜாப் பூஞ்செடியாகத் தரையில் சாய்ந்துவிட்டாள் ! 21. மங்கலப் பூக்கள் அதோ, அடிசாய்ந்த ரோஜாப் பூச்செடியை ஒத்து மஞ்சுளா தரையில் சாய்ந்து கிடக்கின்ருள் ! அம்மா ! என்று வீரிட்டலறிய மூன்றெழுத்துச் சொல்லின் எதிரொலி இன்னமும் தேயவில்லை; ஓயவில்லை ! அம்மா ! என்ற அந்த அழைப்பின் ஒலி-மஞ்சுளாவின் அலறல் சத்தம், மஞ்சுளாவைப் பெற்ற மீனுட்சியின் தளர்ந்த் நெஞ்சத்தை உலுக்கிக் குலுக்கிவிட்டது! அருமைப் பெண் னுக்கு ஏற்பட்டுவிட்ட அலங்கோலத்தைக் காண்ச் சகிக்க் வில்லை அவளுக்கு மகளே நோக்கி விரைந்தவளுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. மனமும் ஓடாமல் இருந்திருக்க லாகாதோ ? அப்படிச் செயலிழந்து இருந்திருந்தால், அவள் தன் கணவரைப் பற்றி இம்மியளவும் கருணை இல்லாமல், பேசிய பேச்சு மகளான மஞ்சுளாவை இப்போது பிரக்ஞை தவறிச் சாய்ந்து கிடக்கச் செய்து விட்டது. இந்த உண்மையை மீளுட்சி உணர்ந்திருப்பாளா? -- மஞ்சு! அம்மா மஞ்சு!" என்று விம்மிக்கொண்டே, மஞ்சுளாவின் நெஞ்சை தடவிக் கொடுத்தாள்; மூச்சின் ஓட்டத்தை அறிய, கை விரலே மகளின்