பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 அப்போது : வாசல் வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்டது, சுந்தரேசன் நடந்தார். போலீஸ்காரர் ஒருவர் நின்ருர், ரொம்ப நேரமாய் இங்கே கலாட்டா நடந்துக்கினு இருக்குதே ' என்ன சமாச்சாரம்? யார் நீங்க ?’ என்று விசாரித்தார். "என் பெயர் சுந்தரேசன் : அது சரி ; நீங்க இங்கே என்ன சண்டை போடுறீங்க : 'இது 6T63r வீடு !” "ஓ !. நீங்க அந்த அம்மாளோட புருஷனு ?...' புயலாகக் குறுக்கிட்டார் சுந்தரேசன், ஆமாங்க சார்: என் ருர். "ஏம்மா, அவர் சொல்றது. வாஸ்தவம்தான ?” என்று மீனுட்சியை நோக்கிக் கேட்டார் காவலர், மீட்ைசி குரல் கம்ம, ஆமாங்க ஐயா!" என்று பதிலுறுத் தாள். சுந்தரேசன் ஏன் அப்படிச் சிரிக்கிருர் ? சரி, சரி, போய்ப்படுங்க, குடும்பம் என்ருல் சண்டையும் சமாதானமும் இருக்கிறது இயல்புதான். போய்ப் படுங்க, நாட்டிலே பதட்ட நிலமை இருக்கிறதை மறந்திட்டிங்க போலி ருக்கு!" என்று எச்சரித்துவிட்டு, போலிஸ்காரர் மறைந்தார். டக்கென்று வாசற்புற விளககை அனைத்தாள் மஞ்சுளா, மீளுட்சி உள்ளே நடந்தாள் கொண்டைப் பூ நழுவியதை அவள் அறிந்தால்தானே?... சுந்தரேசன் பூட்டப்பட்டிருந்த வாசற் புறக் கதவைத் திறந்து வெளியே நடந்தார் அப்படியே நின்றர் சிரித்தது சுந்த ரேசன் தானு: