பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ...... மீண்டும் தலைப்புச் செய்திகள், வங்காள தேசத்தில் பாதிக்கு மேற்பட்ட பகுதிகளை நம் பாரத ராணுவம் கைப்பற்றி விட்டது. ஜெஸ்சூர், சில்கெட் உள்பட இருபது நகரங்களே இதுவரைப் பிடித்துவிட்டோம். இப்போது நாம் டாக்காவை நோக்கி விரைந்து கொண்டிருக்கிருேம். ' அவள் துள்ளிக் கொண்டே வெளிப்புறம் வந்து, பத்திரீக் கையையும் பூப்பொட்டலத்தையும் எடுத்துக் கொண்டாள். இடது கையில் சுழன் ருடிய டம்பப்பையைக் கழற்றினுள். பாதை யில் கிடந்த ஸ்லிப்பர்களே ஒதுக்கமாகப் போட்டாள், உள்ளே போய் எல்லாவற்றையும் அந்தந்த இடத்தில் வைத்தாள். நிர்மலாவிடம் பூவைக் கொடுக்க வேண்டும். ஜெஸ்சூரை நம்ப ராணுவம் கைப்பற்றிடுச்சு, பேஷ் நிர்மலா குதிச்சிருப்பாள் : வாசற் கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டு சமையற் கட்டுக்கு விரைந்தாள் மஞ்சுளா. பணி உடைகளை இடம் மாற்றினுள். சாக்லெட் நிற சேலைக்கும் ஜாக்கெட்டுக்கும் இடம் கொடுத்தாள். மங்கின ஒளியில் அவள் தன்னுடைய பிரேஸி யரை குனிந்து எடுத்த நேரத்தில், அடியில் மறைந்து கிடந்த அந்த உறைக் கடிதமும் கையோடு வந்தது. பெருமூச்சுக்கு வழி காட்டியபடி அவள் தலை நிமிர்ந்தாள். கடிதமும் கையுமாக ஹாலுக்கு வந்த அவள், அக்கடிதத்தைரோஜா நிற டைரிக்குள் வைத்தாள். மேல் முனே, பார்வைக்குப் படும்படியாக செய்தாள், அந்தி மயங்கிய வேளையிலே தேவிபரடைஸ் அரங்கச் சூழலிலே ஞானசேகரன் அத்தானைச் சந்தித்ததை அவளால் மறந்துவிட முடியாதுதான்! அத்தாகுேடு உடன் இருந்த பூலோக ரம்பை யைத்தான் அவள்மறந்துவிடுவாளா என்ன? ஞானசேகரளுேடு நின்றிருந்த அந்த அழகியைக் கண்டவுடன், மஞ்சுளாவின் இதயம் குதூகலம் அடைந்ததல்லவா? பின் அவளுடைய அதே மனம் ஏன் இப்படிச் சலனம் கண்டு தவிக்கிறது? முன் இ.ளேச்சலுக்கு ஒய்வு வேண்டும்,