பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 உன் அம்மா துர்க்கை அவதாரம் எடுத்திருக்ச வேண் டும்! இல்லையென்றல், விதி இப்படிச் சிரீத்திருக்குமா? பாவம், திருவாளர் சுந்தரேசன்! கடந்த காலம் கண்ணிரோடு கழியட்டும். இனி நீ அமைதிபெற முயன்ருல்தான் நல்லது. நீ பெறும் அமைதியில்தான் உன்னைப் பெற்ற தாயின் எதிர் காலம் இருக்கிறது! முடிவில்தான் ஆரம்பம் பிறக்கிறதோ ? சிந்தித்துச் செயலாற்ற வேண்டுமல்லவா? அலுவலகப் பணிகள் உனக்கு ஆறுதல் பயக்கக்கூடும்! இது என் அன்பான ஆலோசனை. நாளை பணிமனையில் சந்திப்போம் நாம் ! உன் அன்புள்ள, ETsd. dressdridssof விழி நீரை வழித்து விட்டாள் மஞ்சுளா, அப்போது. வாசல் வெளியில் கார் சத்தம் வெடித்தது. அங்கே: தமிழரசி-பேரழகி தமிழரசி நின்ருள்!