பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ரங்கத்துக்கு இருந்திருந்தாற்போல எங்கிருந்துதான் புதையல், கிடைத்ததோ தெரியவில்லை : கண் மூடிக் கண் திறப்பதற்குள் அவர் திடீர்ப் பணக்காரராகி விட்டார், பட்டணம் போய்ச் சேர்ந்து விட்டார். நாட்கள் ஆமையாக நகர்ந்தன, சுந்தரேசனைப் பொறுத்த அளவில். மீனுட்சியின் தமையனை ஆனந்தரங்கத்திடமிருந்து தன் மைத்துனனை சுந்தரேசனுக்கு அதிசய விதியைப் போன்று ஒருநாள் கடிதமொன்று வந்தது. அக்கடிதத்தில், தங்கையைக் குடும்ப சகித்ம் சென்னைப்பட்டணத்துக்கு வந்து போகும்ப்டி கேட்டுக் கொண்டிருந்தார் ஆனந்தரங்கம். பழக் கடை வியாபாரம் போட்டியின் விளைவாக மந்தம் தட்டிப் போயி குந்ததால், மனம் குமைந்து சுந்தரேசன் வருந்திக் கொண்டி ருந்த நேரம் அது. மீட்ைசிக்குப் பட்டணத்திற்குப்புறப்பட உள்ளுர ஆசை. ஆலுைம், நலிந்து மெலிந்திருக்கும் நேரத்தில் தாங்கள் அங்கே செல்வது அவ்வளவு உசிதமாகப் படவில்லை. சுந்தரேசனுக்கு, கடைசியில் வழக்கம் போலவே அன்றும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பூசல் பூதமாகக் கிளம்பி யது. வெற்றி மீனுட்சிக்குத்தான். அந்த வெற்றிக்கு ஆதார சுருதியாக அமைந்தவள் சிறுமி மஞ்சுள! - என் அத்தான நான் பார்த்தால்தான் மத்தியானம் சாப்பிடுவேன். என்ைேட அத்தான் ஞானசேகர் என் கண்ணுக்குள்ளவே நிற்குதாக்கும். பாவம் எத்தனை நேரம்தான் அது நின்னுகிட்டிருக்கும்? கால் வலிக்காதாக்கும் என்று வாதம் செய்து, பிடிவாதம் செய் தாள் அவள். சுந்தரேசனின் குடும்பம் ரெயிலேறிற்று. நாளப்பின்னக்குக் கொள்வினை, கொடுப்பின வச்சிக்க வேண்டியவங்க நாம. உன் அண்ணன் போட்ட தபாலுக்கு ச்சுப் போகாட்டி, பணக்காரராகிட்ட சடன கொள்வாரே என்ரும் பேச்சுக்கு அனுசரித்தவண்ண்ம்.