பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 என்க்காக நீ ! உனக்காக. நான் ! “ என்ற இந்த முடிவு இன்று நேற்று நிர்ணயம் செய்யப்பட்டது அல்லவே! அந்த உறவின் உரிமையோடுதான், நாம் இருவரும் இதுகாறும் சந்தித் தும் பழகியும் வந்திருக்கிருேம். இவ்வுண்மையன் நிலவரத்தை என் மாதிரி நீயும் உணர்ந்திருக்க வேண்டுமென்றே நான் எதிர் பார்க்கிறேன் ; நம்புகிறேன், இந்தத் தீபாவளிக்கு நான் உனக்காக ஆசையோடு வாங்கிவந்த புடவை-சோளியைக் கூட ஏதேதோ தர்க்கம் பேசித் தட்டிக் கழித்து, நிர்த்தாட்சண்யமாக நிராகரித்து விட் டாய் நீ! இன்னமும் அவை உனக்காகவே காத்திருக்கின்றன : அவை என்றென்றும் உனக்கென்றே காத்துக் கொண்டும் இருக்கும் !... பொழுது விடிந்து, பொழுது போனல், தஞ்சை மண்ணிலே நீயும் நானும் மணல் வீடு கட்டி, கணவன்-மனைவி விளையாட்டு விளயாடி மகிழ்வோமே, அந்தப் பொன்னை இனிய நாட்களே நீ மறந்து விட்டாயா? அந்நாளிலே, தஞ்சாவூரிலே நீயும் நானும் ஒரு சமயம் போட்டோ எடுத்துக கொண்டோமே, அந்தப் பசுமையான நிகழ்ச்சியை உன்னல் எப்படி மஞ்சு மறக்கமுடியும்? சமீபத்தில் ஒரு நாள் அண்ணு சமாதிக்கு அருகில் நாம் இருவரும் எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. வழக்கம் போலவே அப்போதும் உன்னிடம் உன் முடிவைச் சொல்லும்படி நான் வேண்டினேன். நீயோ விதிபோலச் சிரித்தவாறு, அத்தான், இன்னமும் நான் பங்களா வாங்கலேங்களே? இந்நிலையிலே, ஏழை அபலையான நான், லட்சாதிபதியான உங்களைக் கணவ கை அடைவதற்கு எப்படிங்க நான் கனவு காண முடியும்? : என்று புதிர் போட்டு விட்டு, உன் தோழிகளுடன் நீ நழுவி விட்டாய் ! இனிமேல் உனக்கு எதற்டிப் பங்களா? எனக்கிருக்கும்பங், களாக்கள் போதாதா?