பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 1 பேஷ், பேஷ் ... என்னுேட தோழி நிர்மலா சமர்த்து யாருக்கு வருமாம்?... இந்தா, இந்த இரண்டு தபால்களையும் நீ வாய்விட்டுப் படி; உன் கேள்விகளுக்கான பதில்கள் கிடைச் சிடும் ! என்று அமைதியாகக் கூறி, தன்னிடமிருந்த இரு கடிதங்களையும் அருமைத் நோழி வசம் ஒப்படைத்தாள் மஞ்சுளா. நிர்மலாவின் கைகளிலே அக்கடிதங்கள் தத்தளித்தன. இந்த ல்ெட்டர்களே நான் படிக்கிறது நாகரீகமல்ல, மஞ்சு! : என்று அவள் தடுமாறிள்ை.

நான் சொல்லித்தானே நீ படிக்கப் போகிருய் ! ?
  • நிர்மலா, நமக்குள்ளே இனியும் ரகசியம் இருக்கக் கூடா. தல்லவா ? ம்... முதலிலே என் அன்பு அத்தானுேட லெட்டரை படி ! சாதாரண லெட்டர் இல்லே! லவ் லெட்டர் . ம்... பர வாயில்லே. படி, நிர்மலா ... நமது நாட்டின் எல்லைப் பாது காப்பு சம்பந்தந்பட்ட ராணுவ முகாம்களிலேயிருந்து உன் அன்பு அத்தான் மிஸ்டர் குமாரலிங்கம் உனக்கு ஆசையோட எழுதின எத்தனையோ காதல் கடிதங்களை நீயும்தான் படிச்சிருப் பாய் ! ஆளு, என் அன்பு அத்தான் மிஸ்டர் ஞானசேகரன் எழுதியிருக்கிற இந்தக் கடிதம் - இந்தக் காதல் கடிதம்தான் என் வரைக்கும் விதி ... இந்தப் புதிருக்கு நீ விடை காணவும் முடியும். ஆல்ரைட்! நீ படி!' என்ருள் மஞ்சுளா. சலனத்தை வென்ற ஓர் அபூர்வ அமைதி அவள் குரலுக்கு எப்படித்தான் பக்குவப்பட்டதோ ? நெற்றிப் பொட்டுத் தளதளத்தது!

குனிந்த தலையை நிமிர்த்தப் பயந்தவள்போல் நிமிர்ந்தாள் மஞ்சுளாவிற்கு அவள் அன்பு அத்தான் எழுதிய அக்கடிதத்தை வாய்விட்டு நிதானமாகப் படிக்கத் தொடங்கினுள்,

  • பிரியமுள்ள அத்தை மகள் மஞ்சுளாவுக்கு,

உன்னுடைய காதலுக்காக இன்னமும் எத்தன காலம் கிடப்பது? இனியும் நீ என்ன சோதிப்பது அழகா?