பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 என் உயிரின் துணைவியாக அடைவது என்று நோன்பு மேற் கொண்டிருக்கிறேன். இவ்வுண்மையை மனிதாபிமானத்தோடு எண்ணிப் பார். மறந்துவிட மாட்டாயே என்ன ? மறுத்துவிட மாட்டாயே என்ன? நல்ல தீர்ப்புச் சொல்லும் வாயல்லவா, அருமை மஞ்சு!... ஒ. மை டியர் மஞ்சுளா ... உன் அன்பு அத்தான், జీ. ஞானசேகரன் நிர்மலா வளே குலுங்க முகத்தை ஒத்திட்டுக் கொண்டு, ஆசுவாசப் பெரு மூக்சு விட்டவளாகத் தலையை நிமிர்த்திப் பார்த்தாள், பேசும் கண்களிலே நாணம் பேசியது. முறுவல் மாருமல் வீற்றிருந்த மஞ்சுளாவின் கம்பீரமான மெளனம், தான் ஆவலோடு எதிர்பார்க்கும் நல்ல சேதியையே - நல்ல தீர்ப் பையே மற்ருெரு கடிதம் வழங்கியிருக்கவேண்டும் என்பதற்குச் சாட்சியம் போல அமைந்திருப்பதாகவே நிர்மலா உணர்ந்தாள். வரவழைத்துக் கொண்ட அமைதியோடு மறு கடிதத்தைப் பிரித் துப் படிக்கலாள்ை. அன்பு அத்தான் அவர்களுக்கு, வணக்கம் பல, காதலுக்கு-அதாவது, நீங்கள் என்பால் கொண்டிருப்ப தாகக் குறிப்பிடுகிற அந்தக் காதலுக்கு ஒரு நினைவுச் சின்ன மென் அமைந்திருக்கும் உங்கள் அன்புக் கடிதத்தை வழ்க்க போலவே நிதானமாகப் படித்தேன். வழக்கத்திற்கு விரோத் மாக, ரொம்பவும் கனமானதும் பெரியதுமான வார்த்தைகளை அங்கங்கே அள்ளி வீசியிருப்பதையும் என்னுல் உணர்ந்திட முடிந்தது. பொ.-3