பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 குமா? இவ்விஷயத்தில், தெய்வத்தின் நிலைஎன்ன வென்பதைப் பற்றி நான் ஏதும் அறியமாட்டேன். ஏனென்ருல், தெய்வத்தை நான் சந்தித்ததில்லை!. அத்தான்!-என் வரை காதல்’ ஒரு ஏட்டுச் சுரைக்காய்! காதல் ஒரு ஹம்பக்!-காதல் என்பது ஒரு பொய் விளையாட்டு ! விஞ்ஞானத்தில், மாறுபட்ட இரு துருவங்கள் சந்திக்க முடியும்-ஆல்ை, பொருளாதார விதிப்படி, பணக்கார மாமன் மகனும், ஏழை அத்தை மகளும் சந்திக்கவே முடியாது, மண மேடையிலே! நீங்கள் சுட்டின மாதிரி, நான் முறுக்கு; வெறும் முறுக்கு: ஹல்வா எங்கே? முறுக்கு எங்கே?... தொடக்கம் என்ருல் அதற்கு ஒரு முடிவும் இருக்கவே செய் யும். இது விதி; விதியின் விதி. ஆகவே, இதோ, என் ... و به بهانه அன்பு அத்தான்! உங்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்கும் பாக்கியம் எனக்கு இப்பிறப்பிலே கிடையாது! எனவே, என்ன-இந்த மஞ்சுளாவை மறந்துவிடுங்கள்! தயவு செய்து மறந்து விடுங்கள்!-பெரிய மனசு பண்ணி மறந்துவிடுங்கள்! உங்கள் விளையாட்டுத் தோழியை உங்கள் அன்பு அத்தை மகளை நீங்கள் மன்னிக்காவிட்டால், பின் இந்த மண்ணிலே வேறு யார்தான் மன்னிப்பது?. ஆளுல் ஒன்று: ஐந்து வயதிலே, அறியாப் பருவத்திலே தஞ்சையம்பதி யிலே மணல் வீடு கட்டி புருஷன்-பெண்டாட்டி விளையாட்டு விண்யாட எனக்கு விளயாட்டுத் தோழகைக் கிட்டிய அந்த அத்தானே-அன்பு அத்தான் ஞானசேகரை ஏழேழு பிறவிக் கும் என்னுல்மறக்கவே முடியாது!.. இப்படிக்கு, எஸ். மஞ்சுளா