பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மகன் இளங்கோ என்றைக்கோ திருமணம் புரிந்து கொண் டிருப்பாராம்! மிஞ்சியிருந்த நகல் பிரதியில் கண்பதித்தாள் அவள், புரட்சி எழுத்தாளர் அதிவீர ராமபாண்டின் எழுதிய 'காணுமற் போன காதல் என்னும் நவீனத்தின் நான்காம் பதிப்புப் பொங்கல் பரிசாக வெளியிடப் பெறும் என்கிற தகவல் சிங்கப்பூர் வியாபாரிக்குச் செல்ல வேண்டும். அந்தக் கதையை அவளது ரசிக உள்ளம் அசைபோட்ட போது, ஒரு சிலிரிப்புக் கிளர்ந்தெழத் தவறவில்லை. கிளியோபாட்ரர் அன்று லிவு போட்டிருக்கிருள் போலிகுக் கிறது. ஸ்டெல்லாவும், நூருன்னிஸ்ாவும் கருமமே கண்ணு யிருந்தார்கள். ஒ. மிஸ்டர் மாசிலாமணி வேலைக்கு வந்திருக் கிருர் !., தொலைபேசி யாரையோ கூவிக் கூவி அழைக்கிறது! மஞ்சுளாவுக்கு ஏனே திடீரென்று ஒர் அச்சம்-இனம் விளங்காத அச்சம் மனத்தின் உள்ளே கூண்டுப்புளுவாக நெளி யத் தொடங்கியிருந்தது, என்ைேட எக்ஸ்பிரஸ் லெட்டரை அத்தான் இந்நேரம் தாராளமாகப் படிச்சிருப்பாங்க என் பேரிலே அத்தானுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்திருக்கும். அதற்கு நான் என்ன செய்யட்டும்?. ஒருவேளை, என்னே டெலிபோனில் அழைச்சு, என்னைச் கோபிச்சாலும் கோபிப் பாங்க ஓ, பேஷாகக் கோபிக்கட்டுமே. அவர் என்றென் றைக்கும் என் அன்பு அத்தான் தானே?. நினைவுகளைப் பூத் தொடுப்பதற்கான நேரம் காலம் மனத்திற்குத் தெரிவதில்லை தான். தன் உணர்வு விழிப்புப் பெற்றது, தொலே பேசியில் மாசிலாமணி உரையாடியதை அறிந்தபின், டைப் அடிக்கப் பட்ட தாள்களைச் சரிபார்ப்பதில் ஈடுபட்டாள் மஞ்சுளா எல் லாம் ஒழுங்காகவே அமைந்திருந்தது கண்டு, அமைதி கனிந்த மகிழ்ச்சி ஏற்பட்டது, அவற்றை நிர்வாகியிடம் சேர்ப்பிக்க வேண்டும். எழுந்து, நிர்வாகியின் அறையை நோக்கி நடந்த போது, மாசிலாமணி எதிர்ப் பட்டதைக் கண்டு ஒதுங்கி நின்ருள், to . ~~