பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மீேஸ் மஞ்சுளா, நேற்றைக்குச் சாயந்திரம் நீங்க வீட்டுக் குப் புறப்பட்டுப் போனதுக்கப்புறம், பராசக்தி மூவுஸிலிருந்து உங்களுக்கு "ஃபோன் கால் ஒண்னு வந்திச்சுங்க. உங்க ளோடே மறுபடியும் காண்டாக்ட், செய்யறதாகச் சொன்னுங்க என்ருன் மாசிவாமணி, சரிங்க, என்று புன்சிரிப்புடன் சொல்லிவிட்டு, நிர்வாகி யின் அறைக் கதவைத் தள்ளினுள் மஞ்சுளா. அவள் திரும்பிய போது. அவள் கையில் ஒரு கற்றைக் காகிதங்கள் இருந்தன, எதிர்பாராமல் எதிர்ப்பட்ட பதிப்பகத்தின் சொந்தக்காரர் செந்தில் நாயகத்தை வணங்கினுள் அவள். அவர்தம் அன்பின் பாசத்தை அவள் மறக்கமாட்டாள்! டியன் வேளை சமஞ்சுளா! என்ற அழைப்புக் குரல் இரட்டைச் சுருதி யில் கேட்டது. ஸ்டெல்லாவும், நூருன்னிலாவும் சாப்பாட்டுக்குத் தயா சாக நின்றர்கள். மஞ்சுளாவும் கூட்டுச் சேர்ந்து விட்டால், 'ஜம்ா பூர்த்தி என்று அர்த்தம். இந்த முக்கூட்டுக் கைகூடி வருவதென்பது இலேசல்ல. நூருன்னிலா ஏழை வீட்டுப் பெண். நோயாளிப் பெற்றேர்களைப் பராமரிப்பதற்காக அவள் அவ்வப்போது திருவல்லிக்கேணியே சதம் என்று இருந்து விடு வதும் உண்டு. ஸ்டெல்லாவுக்குத் தன் காதல் விலைகள்தாம் பிரதானம், பதிப்பகச் சொந்தக்காரரின் நெருங்கிய நண்பரின் அருமைப் புதல்வி என்றசலுகை வேறு. கிளியோபாட்ரா பர்ட்டி ஆகியிருக்கிருளாம்! ஆகவே, அவள் இந்தச் சின்னஞ் சிறுசு களோடு ஒட்டமாட்டாள். மஞ்சுளா உப்புமாப்பொட்டலத்துடன்எழுந்தாள், ஹாலேக் கடந்தபோது, மாசிலாமணி அச்சுப் படிகளைத் திருத்துவதில் முனைந்திருப்பதை அறிந்தாள். தோழிமார்களை முன்னே செல்ல விட்டு, பின் தங்கிய அவள், !நீங்க சாப்பிடலிங்களா?' என்று அன்பாகக் கேட்டாள்,