பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 வாஸ்தம்தானுங்க, அத்தான்!. இலட்சாதிபதி வீட்டுச் சம்பந்தம் கிட்டனும்னு நாமும் ஒரு அந்தஸ்தைப் பெற முயற்சி செஞசால்தானுங்களே நல்லது ? அது தானுங்க நியாயம் ! எப் பாடுபட்டும் நம் மஞசுவோட கனவை நிறைவேற்றி வைக்க வேண்டியது பெற்றவர்களான நம் கடமையாச்சுதே ” மறுமாதமே அவர்கள் பட்டணத்தின் ராசிமிக்க மண்ணே மிதித்தார்கள், செம்புதாஸ் தெருவிலே இரும்புக் கடை ஒன்று உருவாயற்று, சுந்தரேசன் குடும்பத்தின்பால் சீதேவியின் கடைக் கண் நோக்கு விழத் தொடங்கிவிட்டது அந்த ஒரு பாக்கியத்தோடு மட்டும் வாழ்க்கையின் கதை முடிந்துவிடு கிறதா ?. டஸ், திருப்பத்தில் மடங்கி நின்றது. குமாரி மஞ்சுளாவின் மனம் விழிப்புப் பெற்றது. புரசை வாக்கம் குளத்தை உணர்ந்து, இறங்கினுள். நெடுஞ்சாலையில் நடந்தாள். அப்பாவும் அம்மாவும் வாழ்க்கையை ஒரு யாகமது கக் கருதியிருந்தால், இப்படிப்பட்ட தீவினைகள் சம்பவித்திருக்கக் கூடுமா ?. ஈஸ்வரா அப்பா ஏன் கைது செய்யப்பட்டார் ? அப்பாவை எப்படி விடுதலை செய்வேன் .ே மயங்கிவிட்ட அந்தி நிழல் அவளது உள்ளத்திலும் படர்ந்தது. அத்தான் ஞானசேகரனப் பற்றிய சிந்தனையுமா இப்போது தொற்றிக் கொள்ள வேண்டும் !... வேப்பேரீ போலீஸ் ஸ்டேஷன் வந்தது. மஞ்சுளா திடுக்கிட்டாள் : ஏன் தெரியுமா ? முகப்பில், அந்த ரோஜா நிற டாட்ஜ் விதியெனச் சிரித்தது!