பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சட்டமா ? விதியா ? அந்த ரோஜா நிறக் காரைக் கண்டதும், சூறைக்காற்றில் சிக்கிக் கொண்ட காம்பு முல்லைப் பூவென மஞ்சுளாவின் பூ iனம் அல்லாடித் தள்ளாடியது. சூறைக் காற்றின் கொடுமை மிக்க தாக்குதலைத் தாங்க முடியாமல், இதழ் இதழாக முல்லே மலர் உதிர்வதைப் போன்று அவளது கோல விழிகளினின்றும் வெந்நீர் சரம் கட்டிச் செட்டத் தொடங்கியது. பூ மனத்தில் நிகழ்ச்சிகள் என்னென்னவோ பூ மணமாகச் சிந்திச் சிதறின. எதையுமே நினைக்கவோ, அன்றி மறைக்கவோ முடியாத நிலை யில் தவித்து உருகிக் கொண்டிருந்த அவளே அந்த டாட்ஜ் மேலும் சோதித்தது, இத்தகைய சோதிப்பு, காவல் நிலையத் தின் தலை வாயிலில் காத்துக்கிடக்குமென்று அ வள் கனவு கூடக் கண்டதில்லை அல்லவா? விதி பின் சிரிப்பலைகள் அவளுள் கொடுரமாக எதிரொலித்துக் கொண்டேயிருந்தன. அப்பா கைதான விஷயம் புரியாத புதிராக இருக்கிறது. இது போதா தென்று, அன்பு அத்தான் ஞானசேகரின் கார் கூடவா இங்கே காத்திருக்க வேண்டும் ? மனத்தையும் ம்ானத்தையும் உயிர்க் கழுவில் நிறுத்தி ஊசலாடச் செய்து விட்டிருக்கும் விளையாட் டிற்குப் பெயர்தான் விதியா ?... - மஞ்சுளா கண்களே மூடி மூடித் திறந்தாள். கண்களைக் குத்திப் பாய்ந்த ஒளிக்கதிர்கள் இதயத்தைச் சாடாதா ?அப்பா கைது செய்யப்பட்டிருக்கிருர் ! எப்பாடு பட்டாவது, யாருடைய சிபார்சின் பேரில்ாவது அல்லது, பணம் கட்டியா வது உடனடியாக அப்பாவை ஜாமீனில் விடுவித்தாக வேண் டும் பிரவாகமாகப் ப்ொங்கிய பாச வெள்ளத்தில் தந்தையின் விடுதல ஒன்றுதான் அவளுக்குக் குறியாக அமைந்தது. தந் தைக்கு ஏற்பட்டிருந்த ஆவக்கேடு பற்றி மாசிலாமணியிடம் தெரி