பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 அரைச் சிரிப்புடன், உன் நினைவை. எல்லாம்தான் உன் அத்தான் கிட்டே காணிக்கையாக வச்சிட்டியே, நிர்மலா : என்ருள். நிர்மலா மஞ்சுவின் கையிலிருந்த டப்ராவை வாங்கி,காப்பி யைச் சுவைத்தாள்,

  • சூடு போதுமா ?”

சூடும் போதும் , சுவையும் போதும்!”

  • சந்தோஷம் :

மஞ்சு, ராத்திரி நீ ரொம்ப லேட்டாய்தான் வீடு திரும்பி குயோ ?* மஞ்சுளா எதிர்பார்க்காத வினவல்ல இது ? ஆமாம் ; வெளியே கொஞ்சம் வேலை இருந்திச்சு !’ என்ருள். " ஓஹோ ! . உன் அத்...” என்று:பேச்சைத் தொடங்கிய நிர்மலா, சமர்த்தாக, ஓ, அப்படியா?" என்று கேட்டுவிட்டு மஞ்சுளாவை ஓரக் கண்ணுல் பார்வையிடலாள்ை, மஞ்சுளா தன் அத்தானின் காதலை அங்கீகரிக்க மறுத்துவிட்ட செய்தி நிர்மலாவின் பார்வையில் கீறிக் கிடந்தது! உடன் பிறந்த சகோதரிக்கும் மேலாகத் தன்னிடம் உயி ரையே வைத்துப் பழகிவரும் சிநேகிதியின் தடுமாற்றத்தை மஞ்சுளா புரிந்து கொண்டாள். தன் ஆசை அத்தான் குமாரலிங்கத்தின் படத்திற்குச் சூட்டியிருந்த மல்ர் மாலையை கனவுகள் சிரிக்க நெருடியவாறு இருந்த நிர்மலாவைப் பரிவுடன் நோக்கிய மஞ்சுளாவின் விழி களில் ஈரம் கசிந்தது. நிர்மலா " என்று கூப்பிட்டாள், 8:என்ன, மஞ்சு ?* 'இந்தப் பூமாலை அற்புதமாக மணக்குதே' பொ.-5