பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: t: நான் ஏழை வீட்டும் பெண் ; உங்க பதிப்பகத்திலே வேலை பார்த்து வருகிறவள். இந்த நிலைமையிலே, எனக்குக் காதல் ஒரு கேடா ?. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, என் மன சறிந்து யாருடைய வாழ்க்கையிலும் எந்தக் காரணத்துக்காக வும் குறுக்கிடாதவள் நான். உ. ங் க ள் காதலிலே - என் அன்பு எஜமானரின் தவடிகளான உங்களோட காதலிலே தானு நான் குறுக்கிடப்போறேன் ?. மனிதாபிமானத்தின் பேரிலே செய்யக்கூடிய - தார்மீகக் கடனின் பேரிலே செய்யக் கூடிய - செய்ய வேண்டிய ஒரு சாதாரணச் செயலுக்காகவா வரம் என்று பெரிய சொல்லாகப் போட்டு என்னேப் பயமுறுத்தி aங்க ?. தமிழரசி, இனி என்னைப் பற்றி இம்மியும் நீங்க கவலை கொள்ளத் தேவை கிடையாதுங்க. ஆணு, என் கவலேயெல் லாம் உங்களோட இன்பக் கனவு பலிக்க வேணுமே என்பது தான் பேச்சு முடிந்ததும் கூட, மஞ்சுளாவின் உதட்டுத் துடிப்பு ஒயக் காணுேம் : மனத்தின் துடிப்பு மாத்திரம் முடிந்து விட்டதா, என்ன ?. அன்பு அத்தானின் ஆசைக் காதலே ஏற்க மறுத்த ரகசியம், ரகசியமாகவே இருந்து விடட்டும் 1. 'மஞ்சு 1. மஞ்சு!... நீ. நீங்க என் மட்டுக்கும் தெய்வம் தான் !... உங்களுடைய இந்தத் தியாகத்துக்கு நான் உங்க ளுக்கு எப்பவுமே கடமைப் பட்டிருப்பேன். இது நிச்சயம் !. ரொம்ப ரொம்ப நன்றி, மஞ்சுளா ...' என்ருள் தமிழரசி, தன் முகத்திரையுல் பட்டுச் சிதறிய தமிழரசியின் மகிழ்ச் சிக் கண்ணிரை ஒரு துறவுப் பான்மையோடு தன் பூவிரலால் சுண்டி விட்ட வண்ணம், தமிழரசி, எனக்காக ஒரு சின்ன உதவியை நீங்க செய்தாகனும் ; செய்வீங்களா ? ? என்று கோரினுள். தமிழரசியிடமிருந்து விடுதலே பெற்றவுடன், மஞ்சுளா நல்ல மூச்சு விட்டாள். சொல்லுங்க, மஞ்சுளா! இப்பவே செய்கிறேன்!” என்று கூறிக் கொண்டே, தன் டம்பப் பையைத் திறந்தாள் லட்சாதி பதியின் லட்சியக் குமாரி, தமிழரசி, ஊம்; சொல்லுங்க மஞ்சுளா என்று திரும்பவும் வேண்டினுள்.