பக்கம்:பொன்மணித் தீபம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 யாத்திரை, இதிலே வெயில் இருக்கும், நிழல் இருக்கும். சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும், பயணத்தைக் கவுரமா நடத்திறதிலேதான் வாழ்க்கைப் பங்கு தாரர்களின் கெட்டி புரிய முடியும். அப்பா பேரிலே உனக்கு இருக்கிற ஆத்திரத்திலே நீ வீட்டைவிட்டு வெளிக் கிளம்புறகு சரியில்லே. மற்றப்படி, என்னைப் பெற்றவளான உனக்கு நான் வேறே என்ன சமாதானம் சொல்ல முடியும் ? என்ருள் மஞ்சுளா, மீனுட்சி கரைக்க முடியாத கல்லாக நின்ருள். 'மஞ்சு, ே என்ளுேடு புறப்படப் போகிருயா, இல்லையா ? என்று திரும்பு வும் கேட்டாள் தாய்க்காரி, நான் உன்னோடு வருவதற்கில்லே அம்மா என்றுள் மஞ்சுளா, பேஷ், அப்படிச் சொல்!” என்று சொல்லிக் குறுக்கிட்டுச் சிரித்தார் திருவாளர் சுந்தரேசன். மீளுட்சி தன் கண்ளன எரித்துவிடத் துடித்து விழித்து நோக்கிள்ை. 'உன்ைேடு நானும் வந்திட்ட, அப்புறம் அப்பாவுக்கு யாரம்மா ஆதரவு ' என்று மஞ்சுளா எதிர்க் கேள்வி வீசிய பேச்சை வாங்கிக் கொள்ளாமலேயே மீனுட்சி அங்கிருந்து கிளம்பி விட்டாள். 'நல்லகாலம், சனியன் விட்டது!" என்று எழுந்தார் சுந்த ரேசன். 'அம்மா மஞ்சு, உன் தாய் பெண் அல்ல. பிசாசு, அதல்ைதான் த்ன் மூப்பிலே இப்படிப் பிடிகயிறு அறுபட்ட பசுவாட்டம் கிளம்பிட்டன. மஞ்சு, நீ வீணுக மனம் நொந்து பிரயோசனம் இல்லே, இனி உடைந்த சங்கை ஊதமுடியுமா?" என்று வேதனையின் நேட்டுயிர்ப்புட்ன் சொல்லிவிட்டு அங்கி ருந்து கிளம்ப முயன்ருர். நானும் என் வழியிலே புறப்படுறேன். உன்னே விட்டுட்டு நானும் தனிச்சு இருந்தரல்தான் உன் அம்மாவுக்குப். புத்திவரும். உனக்கு வேண்டுமென்கிற பணத்தை நான் அவ்வப்போது கொண்டுவந்து தாரேன். 露