இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கள். ஆதலால், நான் உடனே ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டேன். பிறகு நான் அப்பொன் நாணயத்தை மெதுவாக எடுத்தேன்; விளக்கு வெளிச்சத்தில் திருப்பித் திருப்பிப் பார்த்தேன்.
இரவு மணி பன்னிரண்டு இருக்கும். அப்போதுதான் எனக்குச் சிறிது தூக்கம் வருவதுபோல் இருந்தது. ஆதலால், நான் அந்த நாணயத்தை அழுத்தமாகத் துணியில் முடிபோட்டுக்கொண்டு சிறிது கண்மூடினேன். அப்போது எனக்கு அருகிலே படுத்திருந்த வேலையாட்களில் ஒருவன் கையானது என்மேல் பட்டது. நான் அந்த நிமிஷமே அச்சத்தோடு எழுந்து மறுபடியும் மூலையில் போய் உட்கார்ந்தேன். நான் தூங்கினால் என் பொன் நாண-
29