இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
'சிறைச்சாலைக்கு வா' என்றாவது சொல்லாமல் இருந்ததே எனக்குப் போதும் அல்லவா! ஆதலால், நான் மிக்க ஆனந்தத்தோடு வீட்டிற்குச் சென்றேன்.
நான் வீட்டிற்குள் சென்றதும் வழக்கம் போல் செய்யவேண்டிய வேலைகளை யெல்லாம் செய்து முடித்தேன்; பிறகு உறங்கச் சென்றேன். ஆனால், எனக்குச் சிறிதும் தூக்கம் வரவில்லை. ஆதலால், நான் அப்பொன் நாணயத்தை என்ன செய்யலாம் என்று படுத்துக் கொண்டே யோசித்தேன். அப்போது மணி பத்து அடித்தது. நான் மெதுவாக படுக்கை விட்டு எழுந்தேன்; பிறகு நான்கு புறமும் சுற்றிப் பார்த்தேன். அச்சமயம் அங்கு உள்ள எல்லோரும் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தார்-
28